For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே பிளேயிங் 11.. அடுத்த அம்பத்தி ராயுடு இவர்தான்.. 4 வெளிநாட்டு வீரர்கள் யார்.. முழு விவரம்

சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் முதல் போட்டி தொடங்கியது.

இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல புதிய வீரர்கள் இடம் பெற்றனர். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்ற சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடுவின் இடத்தில் யார் பேட்டிங் ஆடப் போவது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் சமீர் ரிஸ்வி என்ற இளம் அதிரடி வீரரை தேர்வு செய்துள்ளது சிஎஸ்கே அணி.

அதே போல, கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு துவக்க வீரராக ஆடிய நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே காயம் காரணமாக விலகி இருக்கும் நிலையில் அவருக்கு பதில் துவக்கம் அளிக்கப் போவது யார்? என்ற கேள்வியும் இருந்தது. இந்த நிலையில் துவக்க வீரராக மற்றொரு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா இடம் பெற்றார். இவருக்கு இதுவே முதல் ஐபிஎல் போட்டி ஆகும்.

IPL 2024 CSK vs RCB CSK playing 11 - Sameer Rizwi Rachin Ravindra got debut in IPL

கடந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசிய இலங்கை வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் ஆட முடியாத நிலையில் இருக்கிறார். அவருக்கு பதிலாக வங்கதேச வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றார்.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்றது.

சிஎஸ்கே பிளேயிங் 11 - ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே

ஆர்சிபி பிளேயிங் 11 : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், கர்ன் சர்மா, அல்சாரி ஜோசப், மயங்க் டகர், முகமது சிராஜ்

Story first published: Friday, March 22, 2024, 20:39 [IST]
Other articles published on Mar 22, 2024
English summary
IPL 2024 CSK vs RCB : CSK playing 11 - Sameer Rizwi, Rachin Ravindra got debut in IPL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+