Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : 6 அணிகளின் கேப்டன்கள் அதிரடி மாற்றம்.. 10 ஐபிஎல் டீமின் கேப்டன்கள் பட்டியல்.. முழு விவரம்

சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆறு அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதில் யாரும் எதிர்பாராத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும் மாற்றப்பட்டு இருக்கிறார்.

2023 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக இரண்டு அணிகளின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். தற்போது அந்த இரண்டு வீரர்களும் மீண்டும் அணிக்கு கேப்டனாக திரும்பி உள்ளனர். அதைத் தவிர நான்கு அணிகளின் கேப்டன்கள் மாறி உள்ளனர்.

IPL 2024 CSK vs RCB IPL 2024 captains list after 6 captains were changed

2024 ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கேப்டனை மாற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி தான். அந்த அணியின் நீண்ட நாள் கேப்டன் ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார். அவரை அழைத்து வந்து கேப்டனாக்கி இருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

தங்களுக்கு ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி, அடுத்ததாக சுப்மன் கில்லை தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது.

இந்த இரண்டு அணிகளையும் அடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்கள் அணியின் கேப்டன் ஐடன் மார்கிரமை நீக்கி விட்டு, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ்-ஐ தங்கள் அணியின் கேப்டனாக நியமித்தது. பாட் கம்மின்ஸ்-க்கு 20.50 கோடி கொடுத்து வாங்கி இருந்தது அந்த அணி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் கடந்த சீசனில் தங்கள் அணியின் கேப்டன்களின் காயம் காரணமாக வேறு கேப்டன்களை நியமித்து இருந்தன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிதிஷ் ரானா தலைமையில் ஆடியது. இந்த முறை முந்தைய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அணிக்கு திரும்பி விட்டதால் அவரே கேப்டன் பொறுப்பை ஏற்று இருக்கிறார். அதே போல, டெல்லி கேபிடல்ஸ் அணியின் முந்தைய கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு வழிவிட்டு விலகி இருக்கிறார் 2023 ஐபிஎல் தொடரில் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர்.

இந்த ஐந்து அணிகளின் கேப்டன்கள் மாற்றத்துடன் இந்த ஆண்டு வேறு எந்த மாற்றமும் இருக்காது என நினைத்த போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிர வைக்கும் கேப்டன் மாற்றத்தை அறிவித்தது. சிஎஸ்கே அணியின் 14 ஆண்டு கால கேப்டன் தோனி தனது பதவியில் இருந்து விலகி, ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக தேர்வு செய்து இருக்கிறார். அதை சிஎஸ்கே அணி அறிவித்தது.

இந்த ஆறு அணிகளை தவிர மற்ற நான்கு அணிகளான ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தங்களின் முந்தைய கேப்டன்களுடனே தொடர உள்ளனர்.

2024 ஐபிஎல் தொடரின் கேப்டன்கள் பட்டியல் -

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட்

மும்பை இந்தியன்ஸ் - ஹர்திக் பாண்டியா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - பாப் டு ப்லேசிஸ்

டெல்லி கேபிடல்ஸ் - ரிஷப் பண்ட்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - பாட் கம்மின்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர்

ராஜஸ்தான் ராயல்ஸ் - சஞ்சு சாம்சன்

குஜராத் டைட்டன்ஸ் - சுப்மன் கில்

பஞ்சாப் கிங்ஸ் - ஷிகர் தவான்

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கே எல் ராகுல்

Story first published: Friday, March 22, 2024, 17:59 [IST]
Other articles published on Mar 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+