For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓ! மை காட்.. இன்று கடவுளே சிஎஸ்கே பக்கம் தான்! பயம் காட்டிய டுபிளசிஸ்.. கெத்து காட்டிய சிஎஸ்கே

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ஆர்சிபி அணி கேப்டன் டுபிளசிஸ் அபாரமாக விளையாடி ரன்களில் சேர்த்து வந்த நிலையில் தேஷ்பாண்டே வசமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில், அதற்கு மேலும் தோற்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும். இதனால் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

IPL 2024 CSK vs RCB - Lucky Run out for CSK as Faf duplessis dismissed for 54 runs

இதை அடுத்து, களம் இறங்கிய ஆர்சிபி அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வந்தது. இந்த நிலையில் தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி, அதிரடியாக விளையாடி நான்கு சிக்ஸர் 3 பவுண்டரி என 29 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். இதேபோன்று டுபிளசிஸ் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பினார்.

டுபிளசிஸ், ஆங்கர் ஆடி கடைசி வரை நின்று சில பந்துகளை அடித்து ஆட முற்பட்டார். இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையும் என ரசிகர்கள் கருதினர். ஒரு கட்டத்தில் டுபிளசிஸ், தன்னுடைய ரன் குவிக்கும் வேகத்தை அதிகப்படுத்தினார். மூன்று சிக்சர், மூன்று பவுண்டரி என 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார்.

IPL 2024 CSK vs RCB - Lucky Run out for CSK as Faf duplessis dismissed for 54 runs

அப்போது துரதிர்ஷ்டவசமாக டுபிளசிஸ் ரன் அவுட் ஆனார். ஆட்டத்தின் 12. 6வது ஓவரில் மிட்செல் சாண்ட்னர் வீசினார். அப்போது ரஜத் பட்டிதார் அடித்த பந்தை மிட்செல் சாட்ணர் பிடிக்க முயன்றார். அப்போது பந்து அவருடைய கையில் பட்டு ஸ்டெம்பில் பட்டது. இந்த தருணத்தில் டுபிளசிஸ் இன் பேட் கிரீசில் படவில்லை .எனினும் இதற்கு மூன்றாம் நடுவரின் உதவி நடப்பட்டது.

மூன்றாம் நடுவர் சோதித்ததில் பேட் தரையில் படாதது தெரிய வந்தது. இதனை அடுத்து மூன்றாம் நடுவர் இதற்கு அவுட் வழங்கி விட்டார். இது சிஎஸ்கேவுக்கு அடித்த லக்காக பார்க்கப்படுகிறது. டுபிளசிஸை எப்படி அவுட்டாக்குவது என சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கத்தில் இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக இந்த ரன் அவுட் சிஎஸ்கேக்கு சாதகமாக அமைந்தது. இதனால் கடவுளே நம்ம பக்கம் தான் இருக்காரு என்று சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். எனினும் ரஜத் பட்டிதார் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடி வருவது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.

Story first published: Saturday, May 18, 2024, 21:29 [IST]
Other articles published on May 18, 2024
English summary
IPL 2024 CSK vs RCB - Lucky Run out for CSK as Faf duplessis dismissed for 54 runs ஓ! மை காட்.. இன்று கடவுளே சிஎஸ்கே பக்கம் தான்! பயம் காட்டிய டுபிளசிஸ்.. கெத்து காட்டிய சிஎஸ்கே
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+