CSK vs RCB - IPL 2024 முதல் போட்டி, துவக்க விழா நடைபெறும் தேதி, நேரம்.. எப்படி இலவசமாக பார்ப்பது?
சென்னை : 2024 ஐபிஎல் தொடர் இன்னும் இரண்டு நாட்களில் துவங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதுகின்றன.
2023 ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் வென்று கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை துவக்கி வைக்கிறது. அதை குறிக்கும் வகையிலேயே இந்த ஆண்டின் முதல் போட்டி மார்ச் 22 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படும் நிலையில் தோனி ஆடும் ஒவ்வொரு போட்டியையும் பார்த்து விட வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். மறுபுறம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்த ஆண்டாவது தங்கள் அணிக்கு கோப்பை வென்று கொடுப்பாரா? என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
மேலும், 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி தோனி - விராட் கோலி மோதும் போட்டியாக விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. முதல் போட்டிக்கு முன்னதாக ஒரு மணி நேரம் ஐபிஎல் துவக்க விழா நடக்க உள்ளது. துவக்க விழா மற்றும் போட்டி துவங்கும் நேரம், துவக்க விழாவில் பங்கேற்க உள்ள பிரபலங்கள் யார், இந்த துவக்க விழா மற்றும் போட்டியை எந்த தொலைக்காட்சி மற்றும் மொபைல் செயலியில் பார்க்கலாம் என்பதை இங்கே காணலாம் -
ஐபிஎல் 2024 தொடக்க விழா எப்போது தொடங்கும்?
ஐபிஎல் 2024 தொடக்க விழா மார்ச் 22 ஆம் தேதி மாலை 6:30 மணிக்கு இந்திய நேரப்படி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 தொடக்க விழாவின் நேரடி ஒளிபரப்பை எங்கே பார்க்கலாம்?
ஐபிஎல் 2024 தொடக்க விழா நேரடி ஒளிபரப்பை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்களில் பார்க்கலாம். மொபைல் நேரலை ஒளிபரப்பை ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளத்தில் இலவசமாக காணலாம்.
ஐபிஎல் 2024 தொடக்க விழா எங்கு நடைபெறும்?
ஐபிஎல் 2024 தொடக்க விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியும் நடைபெறுகிறது.
IPL 2024 தொடக்க விழாவில் எந்த பெரிய நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்கள்?
ஐபிஎல் 2024 தொடக்க விழாவில் பங்கேற்கும் பெரிய நட்சத்திரங்கள் - பாலிவுட் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷ்ராஃப், பின்னணிப் பாடகர்கள் ஏஆர் ரஹ்மான் மற்றும் சோனு நிகம் மற்றும் பலர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான முதல் போட்டி எப்போது தொடங்கும்?
சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான முதல் 2024 ஐபிஎல் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும். இரவு 7.30 மணிக்கு டாஸ் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியை தவிர்த்து மற்ற ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். மாலையில் நடைபெறும் போட்டிகளில் 3.30 மணிக்கு தொடங்கும்.


Click it and Unblock the Notifications