Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs RCB - வாழ்வா? சாவா? போட்டியில் வெற்றி பெற போவது யார்? முகமது கையிப் கணிப்பு

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் மிகவும் முக்கியமான ஆட்டமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் பல பரிட்சை நடத்தும் போட்டி மாறி இருக்கிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும்.

அதுவே ஆர் சி பி அணி 18 ரன்கள் வித்தியாசத்திலோ, இல்லை 11 பந்துகள் எஞ்சிய நிலையிலோ வெற்றியை ருசித்தால் ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும். இதனால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

IPL 2024 CSK vs RCB - Mohammed kaif predicts who will win the game

இந்த நிலையில் பெங்களூருவில் வரும் 18ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் நடைபெறும் சிஎஸ்கே ஆர்சிபி போட்டியில் வெற்றி பெறப்போவது யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கணிப்பு வெளியிட்டுள்ளார். அதனை தற்போது பார்க்கலாம்.

இது தொடர்பாக பேசிய அவர் பெரிய போட்டிகளில் எப்படி விளையாட வேண்டும் என்று சிஎஸ்கேவுக்கு நன்றாகவே தெரியும். நாக்கவுட் போட்டிகளில் எப்படி வென்று? எப்படி செயல்பட வேண்டும் என்பதை சிஎஸ்கே வீரர்கள் நன்கு அறிவார்கள். 2023 ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வியின் விழிம்பில் இருந்தது.

இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. போட்டி குஜராத்துக்கு சாதகமாக தான் முடியும் என்று பலரும் நினைத்த நிலையில், ஜடேஜா ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றினார். தோனி தற்போது பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் இருக்கின்றார். தோனி கூட யார் விளையாடினாலும் அவர்கள் ஆட்டத்தை வெல்லும் அளவுக்கு ஒரு செயல்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள்.

இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் பதற்றப்படாதீர்கள். மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள் என்பது தான் தோனியின் ஃபார்முலாவாக இருக்கிறது. எத்தனையோ ஐபில் கேப்டன்கள் வந்திருக்கிறார்கள். ஆனால் முக்கியமான கட்டத்தில் தோனி செயல்படும் விதத்தை யாராலும் செய்து காட்டி விட முடியாது. அந்த அளவுக்கு தனித்துவமான கேப்டனாக தோனி விளங்குகிறார்.

தோனி கேப்டனாக சிறு சிறு தவறுகள் தான் இதுவரை செய்திருக்கிறார். இதனால்தான் சிஎஸ்கே ஒரு சாம்பியன் அணியாக இருக்கின்றது. இது போன்ற குணங்கள் சிஎஸ்கே அணியில் இருப்பதால், ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என்று முகமது கைஃப் கணிப்பு வெளியிட்டுள்ளார்.

Story first published: Thursday, May 16, 2024, 19:31 [IST]
Other articles published on May 16, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+