Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி அடித்த 110 மீ. சிக்சரால் தான் சிஎஸ்கே தோற்றது!கடைசி ஓவரில் நிகழ்ந்த மாற்றம்! இதை கவனிச்சீங்களா?

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோற்றது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக அமைந்திருக்கிறது. ஐந்து முறை சாம்பியன் ஆன சிஎஸ்கே அணி ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 201 ரன்கள் அடித்து இருந்தால் கூட பிளே ஆப் சுற்றுக்கு சென்று இருக்க முடியும்.

ஆனால் 191 ரன்கள் மட்டுமே அவர்களால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் ரன் ரேட் அடிப்படையில் ஆர் சி பி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் சிக்சர் அடித்தால், ஒரு அணி நிச்சயம் வெற்றி பெறும்.

IPL 2024 CSK vs RCB - MS Dhoni massive six is the actual turning point of the match for this reason

பல சிக்ஸர்கள் பல அணிகளில் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஆனால் தோனி அடித்த ஒரே ஒரு சிக்ஸரால் தான் சிஎஸ்கே அணி தோற்றது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் கிரிக்கெட் விமர்சகர் ஒருவர் கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

பெங்களூரில் இன்றைய ஆட்டத்தில் நேரம் செல்ல செல்ல பனிப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக பந்தை வீரர்கள் சரியாகப் பிடிக்க முடியாமல் தடுமாறினர். இன்னும் சொல்லப்போனால் பந்தை சரியாக பிடிக்க முடியாமல், இரண்டு பவுன்சர்கள் எல்லாம் சென்று நோபால் ஆக மாறியது. இதனால் கடைசி கட்டத்தில் ஈரமான பந்தை பிடித்து, தோனி போன்ற வீரர்களுக்கு வீசுவதெல்லாம் மிகவும் கடினம். அப்படி இருக்கும் போது சிஎஸ்கே எப்படி தோற்றது என்பதை தான் தற்போது நாம் பார்க்க இருக்கின்றோம்.

கடைசி ஓவரில் முதல் பந்தில் யாஷ் தயால் வீசிய பந்தை தோனி பளார் என்று சிக்ஸர் கிடைத்தார். இது மைதானத்தில் பார்வையாளர்கள் மாடத்தின் உச்சிக்கு சென்றது.தோனி அடித்த இந்த பந்தின் சிக்ஸர் 110 மீட்டர் தூரம் வரை சென்றது. இந்த நிலையில் பந்து காணாமல் போனதால் உடனடியாக வேறுபந்து மாற்றப்பட்டது. இதுதான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தி இருப்பதாக தேஜாஸ்வி உடாப்பா என்ற கிரிக்கெட் விமர்சகர் கருத்து தெரிவித்துள்ளார்.

பந்து ஈரமாக இருந்தபோது, ஆர்சி பியால் சரியாக செயல்பட முடியவில்லை என்றும் தோனி அடித்த அந்த சிக்ஸருக்கு பிறகு வேறு பந்து மாற்றப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். வேறு பந்து மாற்றப்பட்டதால் அது காய்ந்த நிலையில் தான் இருந்ததாகவும், இதனை பயன்படுத்திக் கொண்டு யாஷ் தயால் சிறப்பாக பந்து வீசி சிஎஸ்கே வை நெருக்கடிக்கு ஆளாக்கியதாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஈரமான பந்தில் வேகத்தை குறைத்து வீசுவது கடினம். ஆனால் தோனி அடித்த சிக்சர் மூலம் வேறு பந்து கிடைத்ததை வைத்து யாஷ் தயால் வேகத்தை தொடர்ந்து குறைத்து வீசினார். இதனால் தான் தோனி இரண்டாவது பந்தில் அடித்தும் சிக்ஸர் லைனில் கேட்ச் ஆனது. இதேபோன்று கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் யாஷ் தயால் வீசியது வெறும் மணிக்கு 106 கிலோமீட்டர் வேகம்தான். இது கிட்டத்தட்ட சுழற் பந்துவீச்சாளர் வீசும் அளவு தான்.

இப்படி வேகபந்துவீச்சாளர்கள் தன்னுடைய பின் கையை பயன்படுத்தி பந்தின் வேகத்தை குறைத்து வீசும்போது நிச்சயமாக அதனை எந்த கொம்பனாலும் அடிக்க முடியாது. இதனால்தான் ஜடேஜா கூட வேகம் குறைவான அந்த பந்தை அடிக்க முடியாமல் தடுமாறினார். இதனால் கேப்டன் தோனி அடித்த அந்த பந்து காணாமல் போனதால் தான் சிஎஸ்கே தோற்றதாக விமர்சனம் எழுந்துள்ளது.

Story first published: Sunday, May 19, 2024, 9:04 [IST]
Other articles published on May 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+