For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இன்று தோனியின் சரவெடி உறுதி.. ஆர்சிபி பவுலிங்னாலே "தலை"க்கு அல்வா சாப்பிட்ற மாதிரி.. இதை பாருங்க!

பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி, சிஎஸ்கே அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனியின் ஸ்பெஷலை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். இன்றைய ஆட்டம் ஆர்சிபி அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால், அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஆர்சிபி அணியை பொறுத்தவரை 11 பந்துகள் அல்லது 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

IPL 2024 CSK vs RCB - MS Dhoni records against RCB in Chinnaswami stadium

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக கடந்த காலங்களில் தோனி இருந்திருக்கிறார். இந்த சீசனிலும் தோனி முக்கியமான ஆட்டங்களில் ரன்களை வாரி குவித்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில போட்டிகளாக தோனியால் சரியாக விளையாட முடியவில்லை. இந்த நிலையில் முக்கியமான ஆட்டத்திற்காக தன்னுடைய உடல் தகுதியை மெருகேற்றுவதற்காக தோனி பேட்டிங் செய்ய வரவில்லை என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தோனி, ஆர்சிபி அணிக்கு எதிராக அதுவும் சின்னசாமி மைதானத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார் என்று அவருடைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றது. இன்னும் சொல்லப்போனால் ஐபிஎல் தொடரிலே ஆர்சிபி அணிக்கு எதிராக தான் தோனி பிரமாதமாக விளையாடி இருக்கிறார். சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக தோனி இதுவரை 413 ரன்கள் குவித்து இருக்கிறார்.

இதில் அவருடைய சராசரி 82.6 என்ற அளவில் இருக்கின்றது. இந்த சின்னசாமி மைதானத்தில் பேட்டிற்கு பந்து நன்றாக வரும். இதனை பயன்படுத்திக் கொண்டு தோனி கடந்த காலங்களில் பல அபாரமான இன்னிங்ஸை ஆடி இருக்கிறார். ஏற்கனவே தோனி தற்போது நல்ல பார்மில் உள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்ய தோனிக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதனை அவர் சிறப்பாக பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

தோனி, ருத்ராஜ், சிவம் துபே போன்ற வீரர்கள் இருந்தாலும் ரச்சின் ரவீந்திரா பெங்களூர் மண்ணில் நன்றாக ஆட வேண்டும் என்று உத்வேகத்தில் இருப்பார். ஏனென்றால் அவருடைய பூர்வீகம் பெங்களூரு தான். ஆர்சிபி அணியில் இன்றைய ஆட்டத்தில் மேக்ஸ்வெல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று ரஜத் பட்டிதார், விராட் கோலி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சம பலத்துடன் இரு அணிகளும் இருப்பதால் நிச்சயம் இன்றைய ஆட்டம் ரணகளமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Story first published: Saturday, May 18, 2024, 14:17 [IST]
Other articles published on May 18, 2024
English summary
IPL 2024 CSK vs RCB - MS Dhoni records against RCB in Chinnaswami stadium இன்று தோனியின் சரவெடி உறுதி.. ஆர்சிபி பவுலிங்னாலே "தலை"க்கு அல்வா சாப்பிட்ற மாதிரி.. இதை பாருங்க!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+