Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன பா இப்படி பண்ணிட்ட! சிஎஸ்கே தோற்றால் இது தான் காரணம்.. போட்டியே மாறி போச்சு

பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆட்டமாக கருதப்படும் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அபாரமாக விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட நாக் அவுட் போட்டி போல் கருதப்படும் இந்த ஆட்டத்தில் ஒரு தவறு செய்தால் கூட அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்.

இப்படி இருக்கும் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருக்கும் ருதுராஜ் செய்த ஒரு தவறு ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையாக மாற்றிவிட்டது. இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளை பெற்று விடும்.

IPL 2024 CSK vs RCB - Ruturaj dropped cameron green at 18 runs made huge difference

அப்படி தோற்றால் கூட குறைந்தபட்சம் 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆவது தோற்க வேண்டும். அப்படி இல்லை என்றால் ரன் ரேட் அடிப்படையில், ஆர் சி பி அணி முன்னேறிவிடும். இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி அதிரடியாக விளையாடி வருகிறது .ஆர் சி பி அணியின் ஸ்டார் வீரர் விராட் கோலி 47 ரன்களும் , டுபிளசிஸ் 54 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினர்.

113 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்சிபி அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்த நிலையில் அந்த அணி சரிவை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஜத் பட்டிதார் மற்றும் கேமரான் கிரீன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அபாரமாக விளையாடி வந்த நிலையில் கேமரான் கிரீன் 18 ரன்கள் இருக்கும்போது சர்துல்ஓவரில் தூக்கி லாங் ஆன் திசையில் அடித்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ருதுராஜ் கையில் வந்த கேட்சை தவற விட்டு பந்து பவுண்டரிக்கு சென்றது.

இதனால் கேமரான் கிரீனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட கேமரன் கிரீன் அதிரடியாக விளையாடி வருகிறார். இந்த கேச்சை சிஎஸ்கே தவறவிட்டதிலிருந்து நான்கு சிக்ஸர்களை ஆர்சிபி அடித்தது. இதனால் ஆர்சிபியின் ஸ்கோர் உச்சத்திற்கு சென்றது. அந்த கேட்சை மட்டும் ருதுராஜ் பிடித்திருந்தால் ஆர் சி பி அணி 200 ரன்களுகுள் சுருண்டு இருக்கும் தற்போது ஆர்சிபி அணி அபாரமாக விளையாடி வருகிறது ஒரு வேலை சிஎஸ்கே அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அது ருதுராஜ் விட்ட இந்த கேட்ச் தான் காரணமாக இருக்கும்.

Story first published: Saturday, May 18, 2024, 21:53 [IST]
Other articles published on May 18, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+