Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"அதே டெய்லர் அதே வாடகை" என்னய்யா இது கோலிக்கும் தோனி மாதிரியே செஞ்சு வச்சிருக்கீங்க

பெங்களூர் : 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் விராட் கோலி தனது ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். முன்பு ஒருமுறை ஐபிஎல் தொடரில் தோனி எந்த ஹேர்ஸ்டைலை வைத்திருந்தாரோ அதே போல விராட் கோலி இப்போது காட்சி அளிக்கிறார்.

தலைமுடியின் இரண்டு பக்கத்தை குறைத்து விட்டு நடுவில் மட்டும் அதிக முடியுடன் காட்சி தருகிறார் கோலி. தோனியைப் பார்த்து விராட் கோலி "காப்பி அடித்து விட்டார்" என ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

IPL 2024 CSK vs RCB Virat Kohli copied MS Dhoni hair style says fans

ஆனால், உண்மையில் இருவருக்கும் ஒரே ஹேர்ஸ்டைலிஸ்ட் தான் இது போல முடியை செதுக்கி இருக்கிறார். அவர் பெயர் ஆலிம் ஹக்கிம். இவர் மும்பையை சேர்ந்த பிரபலமான ஹேர்ஸ்டைலிஸ்ட் ஆவார். சினிமா நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் போன்ற பிரபலங்கள் இவரது வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

IPL 2024 CSK vs RCB Virat Kohli copied MS Dhoni hair style says fans

அதே டெய்லர், அதே வாடகை என்பதைப் போல ஆலிம் ஹக்கிம் தோனி மற்றும் விராட் கோலிக்கு ஒரே மாதிரியாக சிகை அலங்காரம் செய்து இருக்கிறார். இது தெரியாமல் ரசிகர்கள் விராட் கோலி, தோனியைப் பார்த்து விராட் கோலி காப்பி அடிக்கிறார் என கூறி வருகின்றனர்.

தோனி - விராட் கோலி இருவரும் நீண்ட நாட்கள் கழித்து ஒரே போட்டியில் பங்கேற்க உள்ளனர். 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டனாக தோனியும், பெங்களூர் அணியின் நட்சத்திர வீரராக விராட் கோலியும் மோத உள்ளனர். அந்தப் போட்டியைக் காண தோனி - கோலி ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டு உள்ளனர்.

விராட் கோலி கடைசியாக கடந்த ஜனவரி மாதம் இந்தியா - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஒரு போட்டியில் ஆடி இருந்தார். அதன் பின் நடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அதன் பின் இரண்டு மாதங்கள் கழித்து இப்போது தான் விராட் கோலி மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளார்.

Story first published: Tuesday, March 19, 2024, 16:49 [IST]
Other articles published on Mar 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+