For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாக்கான் போல் ஆடிய விராட் கோலி.. மைதான கூரை மீது விழுந்த சிக்சர்.. கிங் கோலி புதிய சாதனை

பெங்களூரு : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டில் விராட் கோலி அபாரமாக விளையாடி வருகிறார். நடத்து சீசனை தற்போது அவர் தான் 680 ரன்களுக்கு மேல் அடித்து ஆரஞ்சு கோப்பையை கைப்பற்றி இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. குறிப்பாக முதலில் ஆர்சிபி அணி பேட்டிங் செய்வதால் 18 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை தோற்கடிக்க வேண்டும்.

இதனால் 200 ரன்களுக்கு மேல் ஆர் சி பி அடிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றது. இன்றைய ஆட்டம் தொடங்கியதில் இருந்து ஆர்சிபி வீரர்கள் முதல் ஓவரில் மட்டும் கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டு இரண்டாவது ஓவரிலிருந்து அதிரடியை காட்டினார்.

IPL 2024 CSK vs RCB - Virat kohli humongous sixers helps him to achieve major milestone

குறிப்பாக தேஷ் பாண்டே வீசிய ஓவரில் விராட் கோலி தன்னுடைய சுய ரூபத்தை காட்டினார். பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத அப்பாவி போல் இருக்கும் விராட் கோலி, தேஷ்பாண்டே வீசிய பந்தில் பளார் என இரண்டு சிக்ஸர்களை பரப்பி விட்டார். அதில் தேஷ் பாண்டே வீசிய 2.1வது ஓவரில் விராட் கோலி அடித்த சிக்சர் மைதானத்தின் கூரையில் பட்டு அங்கிருந்து மீண்டும் கீழே விழுந்தது.

கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் கூட பந்து மைதானத்தை விட்டு வெளியேறி இருக்கும். இதேபோன்று அதே ஓவரில் மூன்றாவது பந்தில் மீண்டும் விராட் கோலி அடித்த சிக்சர் பார்வையாளர்களின் மாடத்தில் போய் விழுந்தது. இதை பார்த்த உடனே சிஎஸ்கே ரசிகர்கள் கொஞ்சம் கலக்கம் அடைந்தனர். விராட் கோலி தற்போது சரியான பார்மில் இருக்கின்றார். இது ஆர் சி பி அணிக்கு எவ்வளவு நல்லதோ அதைவிட இந்திய அணிக்கு நல்லது.

ஏனென்றால் விராட் கோலியை தொடக்க வீரராக பயன்படுத்தலாம் என்ற யோசனையில் இந்திய அணி நிர்வாகம் இருக்கிறது. விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் இதே போல் அதிரடி காட்டினால் நிச்சயம் சிஎஸ்கேவுக்கு சங்கு தான். நல்ல வேலையாக தற்போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் விராட் கோலி சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் தொடரில் 3000 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.

Story first published: Saturday, May 18, 2024, 20:16 [IST]
Other articles published on May 18, 2024
English summary
IPL 2024 CSK vs RCB - Virat kohli humongous sixers helps him to achieve major milestone மாக்கான் போல் ஆடிய விராட் கோலி.. மைதான கூரை மீது விழுந்த சிக்சர்.. கிங் கோலி புதிய சாதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+