சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான 2024 ஐபிஎல் தொடரின் முதல் லீக் போட்டியில் விராட் கோலி பிரம்மாண்ட சாதனை படைத்தார்.
சர்வதேச மற்றும் உள்ளூர் டி20 போட்டிகளில் ஒட்டுமொத்தமாக 12000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் விராட் கோலி. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் விராட் கோலி 6 ரன்களை கடந்த போது இந்த பிரம்மாண்ட சாதனையை படைத்தார். மேலும், இந்தப் போட்டியில் 21 ரன்கள் எடுத்த கோலி சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் செய்தார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே 12000 டி20 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சாதனையை செய்து இருக்கிறார் மேலும் உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய ஆறாவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன் கிறிஸ் கெயில், சோயப் மாலிக், கீரான் பொல்லார்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் இந்த மைல்கல் சாதனையை செய்துள்ளனர். அதே சமயம், குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ரன்களை எட்டிய வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் விராட் கோலி.
டி20களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 12000 ரன்கள் எடுத்த வீரர்கள் -
345 இன்னிங்ஸ் - கிறிஸ் கெய்ல்
360 இன்னிங்ஸ் - விராட் கோலி
368 இன்னிங்ஸ் - டேவிட் வார்னர்
432 இன்னிங்ஸ் - அலெக்ஸ் ஹேல்ஸ்
451 இன்னிங்ஸ் - சோயப் மாலிக்
550 இன்னிங்ஸ் - கீரன் பொல்லார்ட்
டி20 கிரிக்கெட்டில் 12,000-க்கும் அதிகமான ரன்கள் குவித்த வீரர்கள் :
14562 - கிறிஸ் கெய்ல்
13360 - ஷோயப் மாலிக்
12900 - கீரன் பொல்லார்ட்
12319 - அலெக்ஸ் ஹேல்ஸ்
12065 - டேவிட் வார்னர்
12000* - விராட் கோலி
ஐபிஎல் சிஎஸ்கே அணிக்கு எதிராக 1,000-க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த வீரர்கள் :
1057 - ஷிகர் தவான் vs சிஎஸ்கே
1030 - விராட் கோலி vs டிசிகே
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் டு பிளேசிஸ் 23 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஜத் படிதார், மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்கள். விக்கெட் சரிவுக்கு நடுவே நிதான ஆட்டம் ஆடிய விராட் கோலி 6 ரன்களை கடந்த போது இந்த மைல்கல் சாதனையை படைத்தார்.