For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs RR : பவர் பிளே பவுலரை கொண்டு வந்த சிஎஸ்கே.. சான்ட்னர் நீக்கம்.. ருதுராஜ் முடிவு சரியா?

சென்னை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இதன் மூலமாக ஐபிஎல் தொடரில் 11வது முறையாக டாஸை இழந்திருக்கிறார் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.

IPL 2024 CSK vs RR CSK made a right decision to bring Theekshana in place of Santner at Chepauk against Rajasthan Royals

இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் இருந்து சான்ட்னர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தீக்சனா சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், ஈரப்பதம் வராது என்பதால், பேட்டிங் அல்லது பவுலிங் என்பது குறித்து எந்த கவலையும் இல்லை. இந்த பிட்ச் ஒரே மாதிரி செயல்படும் என்று நினைக்கிறேன். இதுபோன்ற பிட்ச்களில் மனதளவில் வலிமையாக இருக்க வேண்டும்.

சிஎஸ்கே அணி முன்னேற வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசித்தோம். அதேபோல் நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். சிஎஸ்கே அணியின் சரியான காம்பினேஷன் மற்றும் பேலன்ஸை பார்த்தோம். அதனால் தொடக்க வீரராக ரச்சினும், நானும் களமிறங்குகிறோம். மிட்சல் நம்பர் 3ல் வருகிறார். சான்ட்னர்-க்கு பதிலாக தீக்சனா சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்த 2 போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக கடந்த சீசனில் தொடர்ந்து ஆடி வந்த தீக்சனா, இந்த சீசனில் பெரியளவில் வாய்ப்புகளை பெறவில்லை. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தின் மாலை நேர போட்டியில் தீக்சனா சேர்க்கப்பட்டுள்ளார். தீக்சனாவின் பவுலிங்கின் பலத்தை சிஎஸ்கே அணி சரியாக கணித்து இன்றைய ஆட்டத்தில் களமிறக்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.

உலகின் எந்த பேட்ஸ்மேனையும் பவர் பிளே ஓவர்களில் பவுலிங் செய்து அசைத்து பார்க்க கூடியவர். அதேபோல் ரன்களை கட்டுப்படுத்துவதோடு, ஏராளமான வேரியேஷன்களையும் தீக்சனா வைத்துள்ளார். இதனால் சான்ட்னர்-க்கு பதிலாக தீக்சனாவை சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனில் சேர்த்திருப்பது சரியான முடிவாகவே பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, May 12, 2024, 15:31 [IST]
Other articles published on May 12, 2024
English summary
IPL 2024 CSK vs RR : CSK made a right decision to bring Theekshana in place of Santner at Chepauk against Rajasthan Royals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+