CSK vs RR : ”சிஎஸ்கேனா பயம் பையா” அந்த வார்த்தையை மட்டும் சொல்லுங்க தோனி.. தெறிக்கும் மீம்ஸ்!
சென்னை : சிஎஸ்கே - ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.
"வேதாளம்" படத்தில் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் ரவுடியாக இருக்கும் அஜித் குமாரிடம் தம்பி ராமையா, "ஐயோ.. நீ காசு கொடுத்தா தான காப்பாத்துவ" என்று செண்டிமெண்ட் காட்சிகள் உணர்ச்சி பொங்க பேசுவார். அதுபோல் சிஎஸ்கே எமர்ஜென்சி சூழலில் இருக்கும் போது ரியான் பராக் கொடுத்த எளிய கேட்சை தீக்சனா கோட்டைவிடுவார். இதில் அஜித் குமாராக தீக்சனாவையும், தம்பி ராமையாவாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "ஐயோ.. உனக்கு தான் ஃபீல்டிங் வராதே" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெறி.

"கருப்பசாமி" படத்தில் வரி வசூல் செய்ய செல்லும் வடிவேலுவை வெட்ட வரும் ஒருவர், "கண்ணை மூடிக் கொண்டு வெட்டினால் தான்டா சரியா வெட்டுவேன்" என்பார். அதற்கு வடிவேலு, "உனக்கு இந்த வியாதி வேற இருக்கா" என நக்கல் செய்வார். நேற்றைய ஆட்டத்தில் ரன் அவுட்டாக போகிறோம் என்பதை உணர்ந்த ஜடேஜா, ஸ்டம்பை மறைத்து கொண்டு ஓடினார். இதனால் ஃபீல்டிங் செய்யவிடாததற்காக அவுட் கொடுக்கப்பட்டார். ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிராகவும் இப்படித்தான் ஜடேஜா செய்தார். இதனால் ஜடேஜாவை பார்த்து சிஎஸ்கே ரசிகர்கள், "உனக்கு ஃபீல்டிங் செய்யவிடாமல் தடுக்கிற வியாதி வேற இருக்காடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலியோ ஜிம்கானா.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் லாரன்ஸ் இறந்த பின் அவரின் கனவை நிறைவேற்றும் வகையில் படத்தை திரையிடும் இளவரசு, "For My Boy Ceaser" என்று கூறுவார். அதனை அப்படியே மாற்றி கேப்டன்சியை விட்டு ஒதுங்கிய தோனிக்காக ராஜஸ்தானை கடைசி வரை களத்தில் நின்று வீழ்த்திய ருதுராஜ்-ஐ இளவரசாக மாற்றி, "For Our Mahi bhai" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ்.

வேட்டைக்காரன் படத்தில் வில்லனாக வரும் வேதநாயகம் எப்போதும், "வேதநாயகம்னா பயம்" என்று வசனம் சொல்வார். அந்த வகையில் இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் துஷார் தேஷ்பாண்டே, 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். பும்ராவுக்கு பின் சிறந்த எகனாமியையும் வைத்துள்ளார். இதனால் வேதநாயகத்தை துஷார் தேஷ்பாண்டேவாக மாற்றி, "தேஷ்பாண்டேனாலே பயம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

மதராசப்பட்டினம் படத்தில் ஆங்கிலத்தில் சில வார்த்தைகளை கற்க விரும்பும் ஆர்யாவும் அவரின் நண்பர்களும் நடுராத்திரியில் வாத்தியாரான ஜார்ஜ் மரியமை எழுப்பி, "ஐயா.. ஒரு உதவி" என்று கேட்க, அதற்கு என்ன என்று கேட்பார். அதற்கு ஆர்யா, "நன்றி சொல்லனும்" என்று டார்ச்சர் செய்வார்கள். அதுபோல் சிஎஸ்கே ரசிகர்கள் தோனியிடம் உதவி கேட்பதாக மாற்றி, "Definitely notனு இன்னொருக்கா சொல்லனும்" என்று டார்ச்சர் செய்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ஒவ்வொரு சிஎஸ்கே ரசிகரின் குரல்.



Click it and Unblock the Notifications