Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

CSK vs SRH : 3 மாற்றங்களை செய்த சிஎஸ்கே.. பதிரானாவுக்கும் காயம்.. சென்னை பிளேயிங் லெவனில் யார்?

ஐதராபாத் : சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. ஏற்கனவே டெல்லி அணியுடன் விளையாடிய போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே அணி உள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

IPL 2024 CSK vs SRH Due to Pathirana illness CSK Made 3 changes in their playing xi against SRH

சிஎஸ்கே அணி தரப்பில் நட்சத்திர வீரர்களான முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வங்கதேசம் சென்றுள்ள நிலையில், பதிரானாவும் காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார். இதன் காரணமாக சிஎஸ்கே அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் சீனியர் வீரரான மொயின் அலி களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் தீக்சனா மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

டாஸ் வென்ற பின் ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், நாங்கள் முதலில் பவுலிங் செய்ய விரும்புகிறோம். இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 2வது பேட்டிங்கிலும் பெரிய மாற்றம் இருக்க போவதில்லை. மயங்க் அகர்வால் உடல்நிலை சரியில்லை. அவருக்கு பதிலாக நிதீஷ் ரெட்டி இடம்பிடித்துள்ளார். அதேபோல் நடராஜன் கம்பேக் கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், சிஎஸ்கே அணியில் ஒரு தோல்வியால் எந்த மாறாது. நிச்சயம் இது புதிய சவால் தான். நட்சத்திர வீரர் பதிரானா காயமடைந்துள்ளார். இதனால் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொயின் அலி, தீக்சனா மற்றும் முகேஷ் சவுத்ரி ஆகியோர் வந்துள்ளனர். பவுலர்கள் பவுலிங் செய்வதற்கும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

சிஎஸ்கே அணி விவரம் : ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மொயின் அலி, மிட்சல், சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி, தீபக் சஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்சனா

ஐதராபாத் அணி விவரம் : அபிஷேக் சர்மா, மார்க்ரம், கிளாசன், அப்துல் சமத், நிதீஷ் ரெட்டி, ஷாபாஸ் அஹ்மத், பாட் கம்மின்ஸ், உனாத்கட், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்க்கண்டே, நடராஜன்

Story first published: Friday, April 5, 2024, 19:23 [IST]
Other articles published on Apr 5, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+