For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Memes : ”உங்கப்பன் விசில கேட்டவன்” ஐதராபாத் அணியை அமைதியாக்கிய சிஎஸ்கே.. தெறிக்கும் தரமான மீம்ஸ்!

சென்னை : ஐதராபாத் - சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk beat srh by 78 runs at chepauk

வடசென்னை படத்தில் அமீரை கத்தியால் குத்தும் தீனாவிடம், டேய்.. நீயுமாடா.. என்று அமீர் கேட்பார். அதற்கு தீனா, "சாரிண்ணா.. நாங்க உன்னை போடலைனா.. நீ எங்களை போட்ருவண்ணா" என்று பதில் கூறுவார். அதுபோல் இத்தனை ஆட்டங்களாக சொதப்பி வந்த மிட்சல் நேற்று ஃபார்முக்கு வந்து அரைசதம் அடித்தார். இதில் தீனாவை சிஎஸ்கே ரசிகர்களாகவும், அமீரை டேரல் மிட்சலாகவும் மாற்றி, டேய்.. மிட்சல் அவுட் ஆகுடா என்று ரசிகர்கள் சொல்வது போலவும், அதற்கு மிட்சல், "டேய்.. நான் நல்லா தான்டா ஆடுறேன்" என்று பதிலளிப்பது போலவும், அதற்கு சிஎஸ்கே ரசிகர்கள், "நீயே நல்லா ஆடுறனா பின்னாடி ஆடுறவங்க இன்னும் நல்லா ஆடுவாங்கடா.. அவுட் ஆவுடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk beat srh by 78 runs at chepauk

லொள்ளு சபாவில் வரும் சுவாமிநாதன் ஒரு எமிசோடில் நாயகியிடம், "நல்லா தான் பேசிட்டு இருப்பேன்.. திடீரென கோபம் வந்துச்சினா.. பட்டு பட்டுனு அடிச்சிருவேன்" என்று அறைந்து சொல்வார். இதில் நாயகியாக ஐதராபாத் பேட்ஸ்மேன்களையும், சுவாமிநாதனாக துஷார் தேஷ்பாண்டேவையும் மாற்றி, "நான் இப்படித்தான் சிக்ஸ், ஃபோர்னு கொடுத்துட்டு இருப்பேன்.. அப்றோ கோபம் வந்துச்சினா.. பட்டு பட்டுனு விக்கெட் எடுத்துருவேன்" என்று சொல்வதாக ஹெட், அன்மோல்ப்ரீத் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரின் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் இவனை புரிஞ்சுக்கவே முடியலைடா மொமண்ட்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk beat srh by 78 runs at chepauk

சார்பட்டா பரம்பரை படத்தில் கபிலனிடம் அடி வாங்கும் டான்சிங் ரோஸ், "அவன் அடிச்ச அடில கதி கலங்கிட்டேன் நானு" வேம்புலியிடம் விவரித்து கதறி அழுவார். இதில் கபிலனாக பதிரானாவையும், அடி வாங்கிய டான்சிங் ரோஸாக மார்க்ரமையும் மாற்றி, "2 பால் ஒய்டு போட்டு, அடுத்த பால் 150 கிமீ வேகத்துல ஸ்டம்பை பார்த்து ஒரு யார்க்கர் போட்டான்ப்பா.. கதி கலங்கிட்டேன் நானு" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் மொமண்ட்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk beat srh by 78 runs at chepauk

சந்திரமுகி படத்தில் முதல்முறையாக வேட்டையபுரம் அரண்மனைக்குள் செல்லும் வடிவேலு அருகில் நிற்கும் ரஜினியிடம், "யானையெல்லாம் செத்து கிடக்குது மாப்பிள்ள" என்பார். அதற்கு ரஜினி, "அது எருமை முருகேஷா" என்று பதிலளிப்பார். இதில் வடிவேலுவாக ஐதராபாத் அணியை மாற்றி, "மாப்பிள்ள.. க்ருனால் பாண்டியா பவுன்சர்லாம் போடுறான் மாப்பிள்ள" என்று சொல்ல, அதற்கு சிஎஸ்கே அணி ரசிகர்கள், "அது ஜடேஜா முருகேஷா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் முட்டுச்சந்தில் சிக்கிய மொமண்ட்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk beat srh by 78 runs at chepauk

3 படத்தில் தனுஷிடம் சிவகார்த்திகேயன், "நான்லாம் ஸ்கூல் போறதே பெருசுடா.. என்னைய போய் ட்யூசன் கூட்டிட்டு வந்துருக்க" என்று அழுது கொண்டே சொல்வார். அதில் சிவகார்த்திகேயனாக கிளாசனையும், தனுஷாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, "நான்லாம் 300 ஸ்ட்ரைக் ரேட்ல விளையாடுறவன்டா.. என்னைய போய் 21 பந்துல 20 ரன்கள்னு ஆட வச்சிட்டீங்களேடா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரியல் கதறல் ரகம்.

Story first published: Monday, April 29, 2024, 8:20 [IST]
Other articles published on Apr 29, 2024
English summary
IPL 2024 CSK vs SRH : Fantastic memes from social media after csk beat srh by 78 runs at chepauk
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+