For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK vs SRH : ரூ.14 கோடி பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்.. சிஎஸ்கேவை வெளுக்கும் மிரட்டல் மீம்ஸ்!

ஐதராபாத் : சிஎஸ்கே - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நடந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கியுள்ள மீம்ஸை பார்க்கலாம்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk lost by 6 wickets against srh

கலகலப்பு படத்தில் சம்பளம் கொடுக்கிறோம் என்பதற்காக குடோனில் இருக்கும் பருத்தி மூட்டையை மீண்டும் வெளியில் கொண்டு வந்து மீண்டும் குடோனிலேயே வைக்கவும் என்று சந்தானம் தனது அடியாட்களிடம் கூறுவார். அதற்கு அருகில் இருந்த விமல், "இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே" என்பார். அதுபோல் சிஎஸ்கே அணி ரூ.14 கோடி கொடுத்து டேரல் மிட்சலை ஏலத்தில் வாங்கியது. 4 போட்டிகளில் விளையாடியும் இதுவரை வெற்றிக்கு பங்களிப்பு செய்யாததால், ரூ.14 கோடி கொடுத்ததால் அனைத்து போட்டிகளிலும் களமிறக்க வேண்டும் என்பதல்ல.. அதற்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருக்கலாம் என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk lost by 6 wickets against srh

ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றதால், சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் பங்காளிகளாகவே பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரையும் ஐதராபாத் அணி இந்த சீசனில் வீழ்த்தி மிரட்டியுள்ளது. இதனை ஆதவன் படத்தில் வடிவேலுவின் மச்சானாக வரும் சத்யனை சூர்யா கும்பல் பிடித்து அடித்துவிடுவார்கள். அப்போது வடிவேலுவை பார்க்கும் சத்யன், "ஜிகர்தண்டா தூத் கொடுத்து என்ன மொத்து மொத்தினார்கள் தெரியுமா" என்று கதறி அழுவார். அதற்கு வடிவேலு, "என்னைய மாதிரியே விம்மி விம்மி அழுகுறியே" என்று கூறுவார். அது போல் வடிவேலுவாக மும்பை அணியையும், சத்யனாக சிஎஸ்கே அணியையும் மாற்றி, சிஎஸ்கே அணியை பார்த்து மும்பை அணி, "என்னைய மாதிரியே அடி வாங்குறியேப்பா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அட்ரா சக்க ரகம்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk lost by 6 wickets against srh

தாஸ் படத்தில் பெரிய மீசை வைத்திருக்கும் ஒருவரை பார்த்து சின்னப்பையன் ஒருவன் மரியாதையின்றி பேசி சண்டைக்கு அழைப்பார். அப்போது அருகில் இருக்கும் வடிவேலு கொஞ்சம் ஆக்ரோஷத்தில் பொங்கி, சிறுவனை விரட்டி செல்வார். அதன்பின் கிட்னியை திருடிவிடுவார்கள். அதுபோல் சிறுவனாக ஐதராபாத் அணியையும், கிட்னியை பறிகொடுத்தவராக மும்பை அணியையும், வடிவேலுவாக சிஎஸ்கே அணியையும் உருவகப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk lost by 6 wickets against srh

வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையிலான ரைவல்ரி உலகம் அறிந்தது. சிஎஸ்கே அணியில் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் மற்றும் பதிரானா இருவரும் ஒன்றாக விளையாடுகிறார்கள். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இருவரும் விளையாடவில்லை. இதனால் சிஎஸ்கே அணியால் அதிகம் மிஸ் செய்யக் கூடிய பவுலர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முஸ்தாஃபிசுர் ரஹ்மானை காட்டிலும், பதிரானாவையே சிஎஸ்கே மிஸ் செய்வதாக வாக்களிப்பட்டது. இதனை சிங்கம் படத்தில் தியாகுவை பார்த்து பிரகாஷ்ராஜ், "தூத்துக்குடில இவ்ளோ தான் உன் பவரா" என்பார். அதனை மாற்றி, வங்கதேச ரசிகர்களை பார்த்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான், இவ்ளோ தான் உங்க பவரா புலிக்குட்டீஸ் என்று கேட்பதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி ரகம்.

IPL 2024 CSK vs SRH Fantastic memes from social media after csk lost by 6 wickets against srh

நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணி புவனேஷ்வர் குமார் 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதனை லியோ படத்தில் பார்த்திபனை முதல்முறையாக சந்திக்கும் சஞ்சய் தத், பழைய விஜயை நினைத்து காட்சிகளாக பார்ப்பார். அதுபோல் விண்டேஜ் புவனேஷ்வர் குமார் வெளிப்பட்டதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் மாஸ்.

Story first published: Saturday, April 6, 2024, 10:54 [IST]
Other articles published on Apr 6, 2024
English summary
IPL 2024 CSK vs SRH : Fantastic memes from social media after csk lost by 6 wickets against srh
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+