For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஃபில்டிங்கை தடுத்தாரா ஜடேஜா.. அவுட் கேட்டுவிட்டு பின்வாங்கிய SRH.. கம்மின்ஸ் செய்த தில்லாலங்கடி?

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற 18 வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்ட சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்தது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18 புள்ளி ஒரு ஓவரில் எல்லாம் நான்கு விக்கெட் இழப்பிற்கு 166 எடுத்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்தபோது ஒரு சுவாரசியமான சம்பவம் நடைபெற்றது.

IPL 2024 CSK VS SRH Match - Pat cummins withdrew the appeal against Jadeja for fielding obstruction

அதாவது ஆட்டத்தின் 18 புள்ளி நான்காவது பந்தில் புவனேஸ்வர் குமார், ஜடேஜாவுக்கு ஒரு அருமையான யாக்கரை வீசினார். எனினும் இதனை பேட்டால் ஜடேஜா தடுக்க பந்து பவுலர் கையில் சென்றது. அப்போது ஜடேஜா கிரீசை விட்டு வெளியே நின்றார். இதனால் பவுலர் ஸ்டெம்பை நோக்கி பந்தை எறிந்த போது அது ஜடேஜா மீது பட்டது. இதனை அடுத்து சன்ரைசர்ஸ் வீரர்கள் உடனே இதற்கு அவுட்டு கேட்டனர்.

அதாவது பில்டிங்கை பேட்ஸ்மேன் தடுத்து விட்டார் என்று கூறி அவுட் கேட்டனர். உடனே நடுவர்கள் மூன்றாம் நடுவரின் உதவியை நாடலாம் என்று பேசிக் கொண்டிருந்தபோது, அங்கிருந்து வந்த சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ், நாங்கள் இதற்கு அவுட் கேட்கவில்லை. போட்டியை தொடரலாம் என்று கூறிவிட்டார். முதலில் இது சன்ரைசர்ஸ் செய்த நல்ல விஷயமாக பார்க்கப்பட்டது.

ஆனால் இதற்கு பின்னால் மிகப்பெரிய ஒரு தில்லாலங்கடி வேலை இருக்கிறது. அதாவது ஜடேஜா தற்போது பார்மில் இல்லாமல் தடுமாறி வருகிறார். அவரை வைத்து ஓவரை ஒட்டி விடலாம் என்பதற்காக ஜடேஜாவுக்கு அவுட் கேட்காமல் சன்ரைசர்ஸ் அணி பின்வாங்கி இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.

ஒருவேளை ஜடேஜாவுக்கு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்திருந்தால், தோனி களத்திற்கு வந்து இரண்டு சிக்ஸர், பவுண்டரி என அடித்து இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் அதிரடி பேட்ஸ்மேன்கள் வந்து விடக்கூடாது என்பதற்காகவே ஜடேஜாவை வைத்து ஓவர்களை தள்ளிவிடலாம் என்று ஒரு அபார திட்டத்தை கம்மின்ஸ் செய்திருக்கிறார். இறுதியில் ஜடேஜா 23 பந்துகளை எதிர் கொண்டு வெறும் 31 ரன்கள் தான் சேர்த்தார். இதில் நான்கு பவுண்டரிகள் அடங்கும்.

Story first published: Friday, April 5, 2024, 23:37 [IST]
Other articles published on Apr 5, 2024
English summary
IPL 2024 CSK VS SRH Match - Pat cummins withdrew the appeal against Jadeja for fielding obstruction ஃபில்டிங்கை தடுத்தாரா ஜடேஜா.. அவுட் கேட்டுவிட்டு பின்வாங்கிய SRH.. கம்மின்ஸ் செய்த தில்லாலங்கடி?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+