For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொஞ்சம் முன்னாடி வந்து நில்லுப்பா.. கண்ணை காட்டிய தோனி.. ட்ராவிஸ் ஹெட் கேட்சை பிடித்த மிட்சல்!

சென்னை : ஐதராபாத் அணியின் அதிரட் வீரர் ட்ராவிஸ் ஹெட் கேட்சை பிடிப்பதற்கு முன்பாக டேரல் மிட்சலுக்கு சிஎஸ்கே நிழல் கேப்டன் தோனி சிக்னல் கொடுத்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. சிறப்பாக பேட்டிங் செய்த ருதுராஜ் கெய்க்வாட் 98 ரன்களையும், டேரல் மிட்சல் 52 ரன்களையும் விளாசினர். சேப்பாக்கம் மைதானத்தில் இது போதுமான இலக்கு என்றாலும், சிஎஸ்கே ரசிகர்கள் ட்ராவிஸ் ஹெட் அதிரடியை எதிர்பார்த்து பீதியில் இருந்தனர்.

IPL 2024 CSK vs SRH MS Dhoni signals Daryl Mitchell to come front in deep point to dismiss Travis Head

ஏனென்றால் இந்த சீசனில் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் 8 போட்டிகளில் விளையாடி 338 ரன்களை விளாசி இருக்கிறார். இவரும் அபிஷேக் சர்மாவும் இணைந்து வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என்று யாராக இருந்தாலும் பொளந்து கட்டி வந்தனர். இதனால் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை முதல் சில ஓவர்களிலேயே வீழ்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் 2வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே பவுலிங்கில் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தலா ஒரு சிக்சரை அடித்திருந்தனர். அப்போது 5வது பந்தை துஷார் தேஷ்பாண்டே வேகத்தை குறைத்து கொஞ்சம் ஒய்டாக வீசினார். இதனை கணிக்காமல் ட்ராவிஸ் ஹெட் பேட்டை சுழற்ற, அது நேராக டேரல் மிட்சல் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனால் ட்ராவிஸ் ஹெட் 7 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IPL 2024 CSK vs SRH MS Dhoni signals Daryl Mitchell to come front in deep point to dismiss Travis Head

இதன் மூலமாக ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த சிஎஸ்கே அணி முழுமையான திட்டத்துடன் வந்ததாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ட்ராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்துவதற்கு முன்பாக தோனி ஃபீல்டிங்கில் மாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது. டீப் பாயிண்ட் திசையில் நின்றிருந்த டேரல் மிட்சல் பவுண்டரி எல்லைக்கு அருகில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார்.

IPL 2024 CSK vs SRH MS Dhoni signals Daryl Mitchell to come front in deep point to dismiss Travis Head

அவருக்கு சிக்னல் கொடுத்த தோனி, கொஞ்சம் முன் வந்து ஃபீல்டிங் செய்யுமாறு அறிவுறுத்தினார். இதன்பின் டேரல் மிட்சல் கொஞ்சம் முன் வந்து நிற்க, ட்ராவிஸ் ஹெட் அடித்த பந்து நேராக மிட்சல் கைகளில் வந்து விழுந்தது. இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன்சியில் இருந்து விலகினாலும், நிழல் கேப்டனாக தோனி ருதுராஜ் கெய்க்வாட்-க்கு ஆதரவாக நின்று வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Monday, April 29, 2024, 10:54 [IST]
Other articles published on Apr 29, 2024
English summary
IPL 2024 CSK vs SRH : MS Dhoni signals Daryl Mitchell to come front in deep point to dismiss Travis Head
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+