Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன மாதிரி டைமிங் ஷாட்ஸ் அது.. எங்க கேப்டன் வேற மாதிரி பேட்ஸ்மேன்.. புகழ்ந்து தள்ளிய மைக் ஹசி!

சென்னை : சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்-ன் ஷாட் டைமிங் ஆச்சரியம் அளிப்பதாக பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றுள்ளார். இந்த போட்டியில் 54 பந்துகளில் 3 சிக்ஸ், 10 ஃபோர்ஸ் உட்பட 98 ரன்களை விளாசி அசத்தினார் ருதுராஜ் கெய்க்வாட். 98 ரன்கள் எடுத்திருந்த போது சதமடிக்க முயற்சிக்காமல், சிஎஸ்கே அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் ருதுராஜ் கெய்க்வாட் விளையாடியது பாராட்டுகளை பெற்று வருகிறது.

IPL 2024 CSK vs SRH Ruturaj Gaikwad is the wonderful timer of the ball and brilliant batsmen says CSK Coach Mike Hussey

அதுமட்டுமல்லாமல் கேப்டனான பின்னரும் பேட்டிங்கில் கூடுதல் ஆக்ரோஷத்துடன் தரமான கிரிக்கெட் ஷாட்ஸ் மூலம் ரன்களை சேர்த்து வருவது ருதுராஜ் மீதான மரியாதையையும் அணியினர் மத்தியில் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி பேசுகையில், ருதுராஜ் கெய்க்வாட் சிறந்த வீரர் என்பதோடு மட்டுமல்லாமல், டைமிங்கில் தரமான ஷாட்ஸை விளையாடக் கூடியவர்.

அவரிடம் நானே, எப்படி ஒவ்வொரு முறையும் கேப்பில் ஷாட் அடிக்கிறாய் என்று கேட்டு வருகிறேன். அதேபோல் எப்போது அட்டாக் செய்ய வேண்டும், யாரை அட்டாக் செய்ய வேண்டும், எப்படி அழுத்தமான நேரங்களில் விளையாட வேண்டும் என்று அறிந்த புத்திசாலியான பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட். ஸ்பின்னர்கள், வேகப்பந்துவீச்சாளர்கள் என்று இருவரையும் நன்றாக எதிர்கொண்டு விளையாடக் கூடிய வீரர். அதேபோல் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ஷாட்ஸ் அடிக்கும் திறன் அவரிடம் உள்ளது.

அதன் காரணமாகவே அவரின் பேட்டிங் பார்ப்பதற்கு அற்புதமாக உள்ளது. அவர் சிஎஸ்கே அணியில் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். கேப்டனான பின்னரும் பேட்டிங்கில் ஃபார்மை இழக்காமல் ஆடுவது அவருக்கு சவாலான விஷயம். ஏனென்றால் இந்தியாவின் தலைசிறந்த கேப்டனின் இடத்திற்கு அவர் வந்துள்ளார். ஒரு கேப்டனாக பல்வேறு விஷயங்கள் அவரின் தலையில் இருக்கும். யுக்திகள், திட்டங்கள், போட்டிக்கு முன்பான முன்னேற்பாடுகள், வீரர்களின் நலன் என்று அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.

அவருக்கு ஆதரவாக பயிற்சியாளார் பிளெமிங் மற்றும் தோனி இருக்கிறார்கள். ஆனால் களத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தனி நபராக தான் முடிவு எடுக்க வேண்டும். அந்த அழுத்தத்திலும் கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக சமாளித்து வருகிறார். இந்த இன்னிங்ஸ் மூலமாக உலகிற்கு அவர் எவ்வளவு சிறந்த வீரர் என்று மீண்டும் நிரூபித்துள்ளார். இது அவரின் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் என்று பாராட்டியுள்ளார்.

Story first published: Monday, April 29, 2024, 11:42 [IST]
Other articles published on Apr 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+