ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெறும் 18வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏனென்றால் சன்ரைசர்ஸ் அணி புத்துயிர் பெற்று தற்போது அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இதே ஹைதராபாத் மைதானத்தில் மும்பைக்கு எதிராக அவர்கள் 277 ரன்கள் அடித்து சாதனை படைத்ததே இதற்கு சான்று.

இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஹைதராபாத்தை எப்படி சமாளிக்கும். ஹைதராபாத்தில் இருக்கும் அதிரடி பேட்ஸ்மேன்களை விரைவில் சிஎஸ்கே ஆட்டம் இழக்க வைக்குமா என்பதை தற்போது பார்க்கலாம். சிஎஸ்கே அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றி ஒரு தோல்வி என்று தற்போது புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஹைதராபாத் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும்.
சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகிறார்கள். குறிப்பாக ஹென்றிச் கிளாசன் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடி காட்டி வருகிறார்.இது சிஎஸ்கே அணிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இடது கை சூழற்பந்துவீச்சாளர்களை கிளாசன் எதிர்கொள்ளும் போது கடந்த ஐபிஎல் 2023லிருந்து எடுத்துக் கொண்டால் 49 பந்துகளை எதிர் கொண்டு 104 ரன்கள் குவித்து இருக்கிறார்.
இதில் ஒரு முறை கூட அவர் ஆட்டம் நடக்கவில்லை .இதேபோன்று ஒட்டுமொத்தமாக சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது ஹென்றிச் கிளாசன் ஸ்ட்ரைக் ரேட் 200 என்ற அளவில் இருக்கிறது. இதேபோன்று தொடக்கத்தில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோரை கட்டுப்படுத்துவதில் சி எஸ் கேக்கு கடும் சிரமமாக இருக்கும். இதனால் சிஎஸ்கே அணி தங்களுடைய யுக்திகளை மாற்ற வேண்டிய நிலை இருக்கும்.
பதிரானா மற்றும் தீபக்சாகர் ஆகியோர் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே சன்ரைஸை கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால் சன்ரைசர்ஸ் அணி நிச்சயமாக 240 ரன்கள் மேல் குவிக்க வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் சிஎஸ்கே அணியிலும் திறமையான வீரர்கள் பலர் இருக்கிறார்கள். பந்து பேட்டிற்கு நன்றாக வரும்போது சிஎஸ்கே வீரர்களும் பட்டையை கிளப்புவார்கள்.
ருதுராஜ், இந்த சீசனில் தன்னுடைய மேஜிக்கை இன்னும் வெளிகாட்டவில்லை. ரச்சின் ரவீந்திராவும் நல்ல பார்மில் இருக்கிறார். சிவம் துபே,டேரல் மிட்செல் போன்ற வீரர்கள் சிஎஸ்கேவுக்கு இன்றைய ஆட்டத்தில் நன்றாக ஜொலிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். சமீர் ரிஸ்வி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த என்று நல்ல வாய்ப்பாக இருக்கும். சன்ரைசர்ஸ் அணியிடம் பெரிய அளவில் சுழற் பந்துவீச்சாளர்கள் இல்லாதது அந்த அணிக்கு ஏமாற்றமாக இருக்கும். எனவே சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.