சென்னை : தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னருக்கு சில வாரங்களுக்கு முன் திருமணம் முடிவடைந்த நிலையில், அவரால் சிறப்பாக செயல்பட முடியாது என்று அஸ்வினின் நண்பர் பிரசன்னா கணித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் 4 நாட்களில் தொடங்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 2022ஆம் ஆண்டு புதிதாக களமிறங்கிய குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

இருப்பினும் நடப்பு சீசனில் ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு மாறியுள்ளதால், குஜராத் அணியின் கேப்டன்சி பொறுப்பை இளம் வீரர் சுப்மன் கில் ஏற்றுள்ளார். அதேபோல் குஜராத் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியும் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க உமேஷ் யாதவ், ஷாரூக் கான், ஒமர்சாய் உள்ளிட்ட வீரர்கள் குஜராத் அணியில் உள்ளனர்.
இந்த நிலையில் குஜராத் அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூட்யூப் சேனலில் அனாலிஸ்ட் பிரசன்னாவுடன் ஆலோசனை நடத்தினார். அந்த வீடியோ அனாலிஸ்ட் பிரசன்னா பேசுகையில், குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா மற்றும் ஷமி இருவரும் விலகி இருந்தாலும், அவர்களின் இடத்தை நிரப்ப தேவையான வீரர்கள் இருக்கிறார்கள்.
சுப்மன் கில், சஹா, சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், ஷாரூக் கான், ரஷீத் கான், உமேஷ் யாதவ், ராகுல் டிவாட்டியா, ஒமர்சாய், மோகித் சர்மா என்று தான் பிளேயிங் லெவன் இருக்கும். இன்பேக்ட் வீரர்களாக அபினவ் மனோகர் மற்றும் நூர் அஹ்மத் இருப்பார்கள். குஜராத் அணியின் பலம் நிறைவாக இருந்தாலும், டேவிட் மில்லருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்துள்ளது.
பிஎஸ்எல் தொடரில் விளையாடுவதற்காக சில வாரங்கள் தனது திருமணத்தை ஒத்தி வைத்தார் டேவிட் மில்லர். வழக்கமாக சர்வதேச கிரிக்கெட்டில் திருமணம் செய்த வீரர்கள் மீண்டும் ஃபார்முக்கு வர சில மாதங்கள் பிடிக்கும். அதனால் டேவிட் மில்லர் ஃபார்ம் கேள்விக்குறி தான் என்று குண்டை தூக்கி போட்டார். அப்போது மறித்த அஸ்வின், லாஜிக் இல்லாமல் பேசாதீர்கள் என்று கூற, அதற்கு பிரசன்னா, என்னிடம் டேட்டா இருக்கிறது. வெளியில் கூறினால் சர்ச்சையாகும் என்று மீண்டும் பேசினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.