For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2024 CSK vs DC : 903 நாள்.. காத்திருந்து சம்பவம் செய்த ரிஷப் பண்ட்.. மெய்சிலிர்த்த ரசிகர்கள்

விசாகப்பட்டினம் : 903 நாட்கள் கழித்து ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்தார். இடையே 14 மாதம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலையில் இருந்த ரிஷப் பண்ட், தனது காயத்தில் இருந்து மீண்டு 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்றார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியின் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்க முடியாமல் திணறினார். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்து தன் அரைசதத்தை நிறைவு செய்தார்.

IPL 2024 DC vs CSK Rishabh Pant hit first fifty after 903 balls in IPL

கடந்த 903 நாட்களாக ரிஷப் பண்ட் எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் அரைசதம் அடிக்கவில்லை. கடைசியாக 2021 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக அரைசதம் அடித்து இருந்தார் ரிஷப் பண்ட். துபாயில் நடந்த அந்த ஐபிஎல் தொடரில் அக்டோபர் 10 அன்று அன்று அரசைதம் அடித்தார். அதன் பின் 2022இல் அவர் 14 போட்டிகளில் 340 ரன்கள் அடித்த போதும் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

அதன் பின் 2௦23 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் பங்கேற்கவில்லை. அதன் பின் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ரிஷப் பண்ட் டெல்லி அணியின் மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்தார். இதை அடுத்து ரிஷப் பண்ட் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். பலரும் சமூக ஊடகங்களில் உணர்ச்சிகரமான பதிவுகளை வெளியிட்டனர்.

இந்தப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. சிஎஸ்கே அணிக்கு 192 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. சிஎஸ்கே அணி பவர் பிளே ஓவர்களிலேயே வெறும் 32 ரன்கள் மட்டும் எடுத்து தடுமாறியது. பின்னர் ரன் குவித்தாலும் 20 ஓவர்களில் 171 ரன்கள் மட்டுமே எடுத்து சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தது. டெல்லி கேபிடல்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பெற்றது.

Story first published: Sunday, March 31, 2024, 23:48 [IST]
Other articles published on Mar 31, 2024
English summary
IPL 2024 DC vs CSK : Rishabh Pant hit first fifty after 903 balls in IPL
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+