For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!

டெல்லி : டெல்லி அணியின் அதிரடி தொடக்க வீரர்களான மெக்குர்க் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தி குஜராத் அணியின் சந்தீப் வாரியர் அசத்தியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 40வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து குஜராத் அணி களமிறங்கியுள்ளது. இந்த இரு அணிகளும் முன்னதாக விளையாடிய போட்டியில் குஜராத் அணியை 89 ரன்களுக்கு சுருட்டி, டெல்லி அணி அபார வெற்றியை பெற்றது. இதனால் டெல்லி மண்ணில் வைத்து குஜராத் அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

IPL 2024 DC vs GT Match Sandeep Warrier dismissed Prithvi Shaw and Fraser McGurk in a single over against Delhi Capitals


இதன்பின் டெல்லி அணி தரப்பில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா - மெக்குர்க் கூட்டணி களமிறங்கியது. குஜராத் அணி தரப்பில் ஓமர்சாய் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே பிரித்வி ஷா பவுண்டரி அடித்து அட்டகாசமாக தொடங்க, அந்த ஓவரில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து சந்தீப் வாரியர் வீசிய 2வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 12 ரன்கள் விளாசப்பட்டது.

இந்த அதிரடி ஆட்டம் தொடர்ந்ததால் 3 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்திருந்தது. ஆனாலும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் திட்டத்தை மாற்றாமல் மீண்டும் 4வது ஓவரை சந்தீப் வாரியரின் கைகளில் கொடுத்தார். அந்த ஓவரின் 2வது பந்தை கொஞ்சம் வேகத்தை குறைத்து சந்தீப் வாரியர் வீச, அதனை கணிக்காமல் மெக்குர்க் சிக்ஸ் அடிக்க முயற்சித்தார்.

மெக்குர்க் அடித்த பந்து நேராக டீப் ஸ்கொயர் லெக் திசையில் நின்றிருந்த நூர் அஹ்மத் கைகளில் தஞ்சம் புகுந்தது. இதனால் அபாயகரமான வீரரான மெக்குர்க் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து இந்த ஓவரின் 5வது பந்தில் பிரித்வி ஷாவிற்கு தரமான பவுன்சர் ஒன்றை வீசினார். அதனை புல் ஷாட் அடிக்கும் முயற்சியில் பிரித்வி ஷா பேட்டை விட, அது மீண்டும் நூர் அஹ்மத் கைகளில் விழுந்தது. இதனால் பிரித்வி ஷாவும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடந்த போட்டியிலும் பிரித்வி ஷாவை பவுன்சர் பந்து மூலமாக சந்தீப் வாரியர் வீழ்த்தி அசத்திருந்தார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக டெல்லி அணி 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச மீண்டும் சந்தீப் வாரியர் வந்தார். அந்த ஓவரில் ஷாய் ஹோப் அட்டாக் செய்ய நினைத்து 5 ரன்களில் ரஷீத் கானின் அசத்தல் கேட்ச்சால் ஆட்டமிழந்தார். 3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த சந்தீப் வாரியர், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Wednesday, April 24, 2024, 20:21 [IST]
Other articles published on Apr 24, 2024
English summary
IPL 2024 DC vs GT Match : Sandeep Warrier dismissed Prithvi Shaw and Fraser McGurk in a single over against Delhi Capitals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+