Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்

டெல்லி : டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி கடைசி ஓவர் வரை சென்று இதயத்துடிப்பை எகிற வைத்தது. 8 விக்கெட்களை இழந்த நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி கடைசி பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை வரை போட்டியை கொண்டு சென்றது.

எனினும், ரஷித் கானால் கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க முடியாமல் போனதால் டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் தன் வெற்றியை உறுதி செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி மரண பயத்தை காட்டி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

IPL 2024 DC vs GT result Gujarat Titans lost the match by 2 wickets

முன்னதாக இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 44 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்தது. பின்னர் அக்சர் பட்டேல் 43 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து அணியை மீட்டார். மறுபுறம் ரிஷப் பண்ட் கேப்டனாக சிறப்பாக பேட்டிங் செய்தார். கடைசி ஓவரில் மட்டும்
30 ரன்கள் சேர்த்த அவர் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார்.

கடைசி 3 ஓவர்கள் மீதம் இருந்த போது பேட்டிங் செய்ய வந்த ஸ்டப்ஸ் அதிரடி ஆட்டம் ஆடி 7 பந்துகளில் 26 ரன்கள் குவித்தார். அவர் 3 ஃபோர், 2 சிக்ஸ் அடித்து இருந்தார். இதை அடுத்து 200 ரன்களை தொடுவதே கடினம் என்ற நிலையில் இருந்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. டெல்லி அணியின் சந்தீப் வாரியார் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.

அடுத்து பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் 6 ரன்களில் வெளியேறிய நிலையில், விரிதிமான் சாஹா - சாய் சுதர்ஷன் அதிரடி ஆட்டம் ஆடி சேஸிங் செய்ய தேவையான ரன் ரேட்டை தக்க வைத்தனர். சாஹா 25 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.

சாய் சுதர்ஷன் 39 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் பின் வரிசையாக விக்கெட்கள் சரிந்த போதும் டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அருகே குஜராத் அணியை கொண்டு சென்றார். அவர் ஆட்டமிழந்த பின் ரஷித் கான் மட்டுமே அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்தது, கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முகேஷ் குமார் வீசிய அந்த ஓவரில் முதல் ஐந்து பந்துகளில் 2 ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார் ரஷித் கான்.

இவருக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த ரிஷப் பண்ட்.. அரண்டு போன குஜராத்

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில் அவரால் பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. இதை அடுத்து டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, April 24, 2024, 23:34 [IST]
Other articles published on Apr 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+