Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Memes : ”அடிச்சதே.. காசி அண்ணனை தான்யா” பும்ராவையே அடித்த மெக்கர்க்.. பல்தான்ஸை பொளக்கும் மீம்ஸ்!

டெல்லி : மும்பை - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

சண்டக்கோழி படத்தில் விஷாலிடம் அடிவாங்கிய பின் மதுரைக்கு போனில் அழைக்கும் அடியாள் ஒருவர், "பையன் ஒருத்தன் கைவச்சிட்டு போயிட்டான்.." என்று சொல்ல, அதற்கு மறுமுனையில், "ஏன்.. காசி அண்ணன் ஊரில் இல்லையா" என்று கேட்பார். அதற்கு, "அடிச்சதே காசி அண்ணனை தான்யா" என்று பதில் அளிப்பார். இதனை காசி அண்ணனை பும்ராவாகவும், விஷாலை மெக்கர்க்-காகவும் மாற்றி, "காசி அண்ணன் மேல இன்னைக்கு ஒருத்தன் காலையே வச்சிட்டான்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் மரண மாஸ் ரகம்.

IPL 2024 DC vs MI Fantastic memes from social media after McGurk attacked Bumrah and DC won by 10 runs against Mumbai

"சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியில் வரும் லாரன்ஸ், "இது ஆக்சன் மேடோம்" என்று சொல்லிய வசனம் செம ட்ரெண்டிங்கில் உள்ளது. இதில் லாரன்ஸாக மும்பை அணியை மாற்றி மெக்கர்கை, "இவன் ட்ராவிஸ் ஹெட் தம்பி மேடோம்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

IPL 2024 DC vs MI Fantastic memes from social media after McGurk attacked Bumrah and DC won by 10 runs against Mumbai

போக்கிரி படத்தில் பிரகாஷ்ராஜ், நடிகர் விஜய்யை பார்த்து "யாருடா செல்லம் நீ.. இப்படி எல்லாரையும் பொசுக்குனு கொல்ற" என்று அழுது கொண்டே நக்கலாக பேசுவார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் மும்பை பவுலர்களை பொளந்து கட்டிவிட்டார் மெக்கர்க். இதனை பிரகாஷ்ராஜாக மும்பை அணியை மாற்றி, "யாருடா செல்லம் நீ.. இந்த பொள பொளக்குற" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

IPL 2024 DC vs MI Fantastic memes from social media after McGurk attacked Bumrah and DC won by 10 runs against Mumbai

கில்லி படத்தில் மதுர முத்துப்பாண்டியை மீனாட்சியம்மன் கோவில் முன்னாடியே வைத்து சவரணவேலு அடிப்பார். அப்போது, "பட்டப்பகல்ல.. மீனாட்சியம்மன் கோவில் முன்னாடியே வச்சி முத்துப்பாண்டியவே ஒருத்தன் அடிச்சிட்டான்னா.. சத்தியமா அவன் மதுரக்காரனா மட்டும் இருக்கவே மாட்டான்" என்று சொல்வார்கள். இதனை முத்துப்பாண்டியாக பும்ராவை மாற்றி சரவணவேலு-வாக மெக்கர்க்கை மாற்றி, "இந்திய மண்ணிலேயே ஒருத்தன் பும்ராவை அடிச்சிட்டான்னா.. அவர் இந்திய வீரரா மட்டும் இருக்கவே மாட்டான்" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் பக்கா மாஸ்.

IPL 2024 DC vs MI Fantastic memes from social media after McGurk attacked Bumrah and DC won by 10 runs against Mumbai

சிவாஜி படத்தில் அத்தனை சொத்துகளை இழந்து ரோட்டில் அமர்ந்து சாப்பிடும் ரஜினியிடம், விவேக், "பேசாம.. நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி" என்பார். அதுபோல் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்காக ஆடிய லூக் வுட் 4 ஓவர்களில் 66 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் லூக் வுட்டை பார்த்து, "பேசாம.. நீ திரும்ப பிபிஎல் விளையாட வந்துரு லூக் வுட்" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் தெரியாம வந்து சிக்கிக்கிட்டேன் மொமண்ட்.

IPL 2024 DC vs MI Fantastic memes from social media after McGurk attacked Bumrah and DC won by 10 runs against Mumbai
Story first published: Sunday, April 28, 2024, 10:16 [IST]
Other articles published on Apr 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+