Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

DC vs SRH : யார்க்கர் பாய் யாருனு மறந்துபோச்சா.. சொல்லி வைத்து தூக்கிய நடராஜன்.. மிரட்டல் கம்பேக்!

டெல்லி : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் நடராஜன் 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஐதராபாத் அணியின் பேட்டிங் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தாலும், தமிழக வீரர் நடராஜனின் பவுலிங்கும் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ஏனென்றால் டெல்லி அணி வீரர்கள் அதிரடியாக விளாசி ரன்களை குவித்த போது, பவர் பிளேவின் கடைசி ஓவரை வீச நடராஜன் அழைக்கப்பட்டார்.

IPL 2024 DC vs SRH Match Tamilnadu Player T Natarajan got 4 wickets for just 19 runs against Delhi Capitals


அந்த ஓவரில் நடராஜன் 4 டாட் பால்கள் உட்பட 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இவரின் ஸ்லோயர் பவுன்சர், ஸ்லோயர் ஷார்ட் பால் போன்ற பந்துகள் பிட்சில் எடுப்பட்டது கம்மின்ஸ்-க்கு புரிந்தது. இதன்பின் வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரின் பந்துகளிலும் வேகத்தை குறைக்குமாறு கம்மின்ஸ் அறிவுறுத்தினார். இதனால் டெல்லி அணி ரன்கள் குவிக்க முடியாமல் திணறியது.

இருப்பினும் மற்ற பவுலர்களின் பவுலிங்கில் பொளந்து கட்டியதால் டெல்லி அணி 8 ஓவர்கள் முடிவிலேயே 131 ரன்களை குவித்தது. இப்படியே சென்றால் அடுத்த 12 ஓவர்களில் எளிதாக 137 ரன்களை எடுக்க முடியும் என்ற நிலை உருவாகியது. அப்போது 11வது ஓவரை வீச வந்த நடராஜன் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க, பண்ட் - ஸ்டப்ஸ் இருவருக்கு ரன் ரேட் அழுத்தம் எகிறியது.

இதனால் பார்ட் டைம் பவுலரான நிதிஷ் ரெட்டியை அட்டாக் செய்ய முயன்று ஸ்டப்ஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நடராஜன் வீசிய 15வது ஓவரில் 7 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், கடைசி பந்தில் யார்க்கர் மூலமாக லலித் யாதவ் விக்கெட்டையும் வீழ்த்தினார். தொடர்ந்து 19வது ஓவரை வீச வந்த நடராஜன், முதல் பந்திலேயே அக்சர் படேல் விக்கெட்டை வீழ்த்த ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் நடராஜன் வீசிய யார்க்கர் பந்தை நார்கியே தடுத்து நிறுத்தினார். ஆனால் மீண்டும் 3வது பந்தில் நடராஜன் யார்க்கர் வீச, அந்த பந்து ஸ்டம்பை தகர்த்து சென்றது. தொடர்ந்து 4வது பந்திலும் நடராஜன் குல்தீப் யாதவை யார்க்கர் மூலமாக வீழ்த்தினார். இதனால் நடராஜன் 5 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிறப்பாக பவுலிங் செய்த நடராஜன் 4 ஓவர்களில் ஒரு மெய்டன் உட்பட 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐபிஎல் தொடரில் நடராஜனின் சிறந்த பவுலிங்காக அமைந்தது.

Story first published: Sunday, April 21, 2024, 7:33 [IST]
Other articles published on Apr 21, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+