CSK : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு குடும்பம் போல் செயல்படும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. இதற்குக் காரணம் சென்னை அணியின் நிர்வாகமே வீரர்களை அப்படித்தான் பாவித்து வருகிறது.
தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மோயின் அலி தீபக்சாகர், பிராவோ உள்ளிட்டவர்கள் எல்லாம் அண்ணன் தம்பியாக தான் பழகி வந்தனர். இதுதான் சென்னை அணியின் வெற்றிக்கு காரணம் என்றும் பாராட்டப்படும்.

இந்த நிலையில் சென்னை அணி குடும்பமாக உள்ள நிலையில் சென்னை அணிக்காக ஒரு குடும்பமே தயாராகி வரும் சம்பவம் தற்போது நடைபெற்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் தீபக்சாகர் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார். வேகப்பந்துவீச்சாளரான இவர் பேட்டிங்கும் நன்கு செய்வார்.
இந்த நிலையில் தீபக்சாகருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டதால், அவரால் இந்திய அணியில் இடம் பெற முடியவில்லை. இந்த நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் தன்னுடைய தந்தைக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் பாதியில் சென்றார். தற்போது இந்திய டி20 அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்றால் ஐபிஎல் தொடரில் தன்னுடைய தலைமையை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

இதற்காக தீபக்சாகர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். தன் தம்பி சாதிக்க வேண்டும் என்பதற்காக அவருடைய அக்கா மால்தி சாகர் தீபக்சாகர்க்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இந்த நிலையில் பயிற்சி முகாம் ஒன்றில் தீபக்சாகருக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயந்திரம் மூலம் பந்து வீசும் பணியை மால்தி சாகர் செய்தார்.பவுலிங் இயந்திரத்தில் 160 கிலோமீட்டர் வேகத்தை செட் செய்து அவர் பந்தை இயக்கினார்.
இதனை தீபக்சாகர் எதிர்கொண்டு ரன் அடிக்க முயன்றார். ஒரு கட்டத்தில் தீபக்சாகர் காலில் அந்த பந்து பட்டது. எனினும் அவர் மீண்டும் தன்னுடைய பேட்டிங் பயிற்சியை செய்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தீபக்சாகர் ஐபிஎல் தொடருக்காக தனது தம்பியை தயார் செய்து வருகிறேன். இது எங்களுடைய குடும்பத்தின் பயிற்சி என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.