Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மிரட்டிய பதிரானா.. தனி ஆளாக சிக்சரை பறக்கவிட்ட ரிஷப் பண்ட்.. சிஎஸ்கேக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த DC

விசாகப்பட்டினம் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு களத்திற்கு திரும்பிய பிரித்வி ஷா டேவிட் வார்னருடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். இருவரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை சுக்கு நூறாக உடைத்தனர்.

IPL 2024 - Delhi capitals set 192 Runs as target for CSK after Pathirana brilliance

விசாகப்பட்டினம் மைதானமும் சிறிய அளவு என்பதால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே 200 ரன்களுக்கு மேல் துரத்த போகிறது என்று ரசிகர்களும் மனதை தயார்படுத்திக் கொண்டனர். அபாரமாக விளையாடிய பிரித்வி ஷா 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் ஆனார். தொடக்க வீர டேவிட் வார்னரும் 35 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார்.

இதில் 5 பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களும் அடங்கும். இந்த தொடரில் அதிரடியாக ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்த ரிஷப் பந்த், இன்றைய ஆட்டத்தில் முதலில் பொறுமை காத்து பின்னர் அதிரடி காட்டினார். மிச்சல் மார்ஸ் இரண்டு பவுண்டரி ஒரு சிக்சர் என 12 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆபத்தாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

டெல்லி அணி அபாரமாக விளையாடி வந்த நிலையில் 16வது ஓவரில் ஆட்டத்தின் போக்கையே தலைகீழ் மாற்றினார். ஆட்டத்தின் 15 வது ஓவரை வீசிய 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி மிட்செல் மார்ஸ் விக்கெட்டை காலி செய்தார். ஒரு பந்து இடைவேளையில் மீண்டும் 149 கிலோமீட்டர் வேகத்தில் யாக்கர் வீசி தென்ஆப்பிரிக்கா வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை பதிரானா வீழ்த்தினார்.

இதன் மூலம் டெல்லி அணி தடுமாறியது. தனி ஆளாக போராடிய ரிஷப் பந்த் 4 பவுண்டரி, மூன்று சிக்சர் என 32 பந்துகளை எதிர் கொண்டு 51 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார் இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191-ரன்கள் எடுத்தது அபாரமாக பந்து வீசிய பதிரானா 31 ரன்களை விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.ஜடேஜா, முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

Story first published: Sunday, March 31, 2024, 21:30 [IST]
Other articles published on Mar 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+