Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மா - ரகசிய டீல்.. முக்கிய ஐபிஎல் அணியுடன் பேரம் பேசிய மும்பை இந்தியன்ஸ்.. என்ன நடந்தது?

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ரோஹித் சர்மாவை அணி மாற்றம் செய்வது குறித்து பேசி இருக்கிறது. ஆனால், சில ஒப்பந்த சிக்கல்களால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்து இருக்கிறது.

இந்த பேரத்தை தொடங்கியது டெல்லி கேபிடல்ஸ் தான் என கூறப்படுகிறது. அந்த அணி ரோஹித் சர்மாவை தங்கள் அணியின் கேப்டனாக நியமிக்க முடிவு செய்து, மும்பை இந்தியன்ஸ் அணியை அணுகியதாகவும், அதற்கு முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்புக் கொண்டதாகவும் ஸ்போர்ட்ஸ் டுடே எனும் ஊடகத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

என்ன தான் டெல்லி அணி பேரம் பேச வந்தாலும், மும்பை இந்தியன்ஸ் அதை ஒப்புக் கொண்டு பேசி இருக்கிறது என்றால், ரோஹித் சர்மா வேண்டாம் என்ற முடிவுக்கு அந்த அணி வந்து விட்டதையே இது காட்டுகிறது. இந்த விஷயம், ரோஹித் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை அணியை விட்டே வெளியேற்ற முடிவு செய்தது என்ற தகவலை அறிந்து அவரது ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.

IPL 2024 : Delhi Capitals tried to buy Rohit Sharma from Mumbai Indians

ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்க உள்ள தகவலை முன் கூட்டியே தெரிந்து கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி, சில மாதங்களுக்கு முன்பே அவரை ஐபிஎல் அணி மாற்றம் மூலம் நேரடியாக வாங்க முயற்சி செய்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் அதற்கு ஒப்புக் கொண்ட போதும், ரோஹித் சர்மாவின் ஒப்பந்தத்தில் இருந்த சட்ட சிக்கல்கள் காரணமாக இந்த அணி மாற்றம் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவை, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கும் முயற்சியில் இருந்த போதே, ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் சவுரவ் கங்குலி, ரோஹித் சர்மாவை டெல்லி அணியின் கேப்டனாக ஆக்கலாம் என்ற யோசனையை அந்த அணி உரிமையாளர்களுக்கு கூற, அவர்கள் அதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை அணி மாற்றம் செய்ய நினைத்த போதும் அது குறித்த சட்ட சிக்கல் இருப்பது தெரிய வந்து இருக்கிறது. ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறார். அதில் சில விஷயங்கள் அணி மாற்றம் செய்தால் பின் நாட்களில் சிக்கலாக மாறும் நிலை இருந்ததை அடுத்து அந்த முயற்சியை கை விட்டு இருக்கிறது டெல்லி கேபிடல்ஸ். மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா விவகாரத்தில் இன்னும் என்னென்ன விஷயங்கள் வெளியே வரப் போகிறதோ?

Story first published: Saturday, December 16, 2023, 21:23 [IST]
Other articles published on Dec 16, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+