For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?

மும்பை : பிரபல கிரிக்கெட் வீரர் சாகலின் மனைவி வேறு ஒரு ஆணுடன் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளிப்பது போல் வீடியோ வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சாகல் அண்மையில் படைத்தார். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் சாகல் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

IPL 2024 - Did Chahal Wife Dhanashree spends time with her boy friend in pool - here is the truth

இந்த நிலையில் சாகலுக்கும், அவருடைய மனைவி தனஸ்ரீக்கும் இடையே பிரச்சனையை ஏற்படுத்தும் விதமாக நெட்டிசன்கள் பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சாகலும்,அவருடைய மனைவி தனஸ்ரீக்கும் மனஸ்தாபம் இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு காரணம் தனஸ்ரீயும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஒன்றாக ஊர் சுற்றுவதாகவும், இருவரும் காதலிப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இதனால் சாகல் மன வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும் இதற்கு சாகலின் மனைவி தனஸ்ரீ கடும் கண்டனம் தெரிவித்ததுடன்,இதுபோல் தன்னுடைய வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் பதிவிட்டு இருந்தார். இது ஒரு புறம் இருக்க, ஒரு நிகழ்ச்சியில் சாகலின் மனைவி வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருந்ததாக புகைப்படம் வெளியானது.ஆனால் அப்போதும் தனஸ்ரீ எதிர்ப்பு தெரிவித்து தமது கணவரும் அதே நிகழ்ச்சிகள் தான் பங்கேற்று இருந்ததாக விளக்கம் அளித்து இருந்தார்.

மேலும் தேவையில்லாத பொய்களை கூறாமல் அனைவரிடமும் அன்பை பரிமாறுங்கள் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் தனஸ்ரீ சாயலில் இருக்கும் ஒரு பெண் அவருடைய நண்பருடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளியல் போட்டு ஆபாசமாக நடனம் ஆடுவதும் முத்தம் கொடுப்பதும் போன்ற காட்சிகள் பரவியது.

IPL 2024 - Did Chahal Wife Dhanashree spends time with her boy friend in pool - here is the truth

அந்தப் பெண் பார்ப்பதற்கு தனஸ்ரீ போல் இருந்ததால், ரசிகர்கள் தனஸ்ரீ தான் இந்த செயலில் ஈடுபட்டதாக கருத்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். மேலும் சாஹலை விவாகரத்து பெறும்படி வலியுறுத்தியும் வந்தனர். இந்த நிலையில் அது தனஸ்ரீ கிடையாது. அவருடைய சாயலில் இருக்கும் வேறு ஒரு பெண் என்பது தெளிவாகி இருக்கிறது.

இதனால் சில ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனுஸ்ரீ வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் தாங்கள் தவறாக பதிவிட்டு விட்டதாகவும், இதனால் தனஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். இன்னொரு தரப்பினர் இது டீப் பேக் தொழில்நுட்பமாக கூட இருக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

Story first published: Thursday, April 25, 2024, 6:43 [IST]
Other articles published on Apr 25, 2024
English summary
IPL 2024 - Did Chahal Wife Dhanashree spends time with her boy friend in pool - here is the truth சாஹலின் மனைவியா இது? நீச்சல் குளத்தில் நண்பருடன் ஜாலி குளியல்.. கோபத்தில் ரசிகர்கள்.. உண்மை என்ன?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+