For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பை வாங்கித் தரப் போவதே இந்த 38 வயது தமிழக வீரர் தான்.. டீமில் சேருங்க

மும்பை : 2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க உள்ள நிலையில் இந்திய டி20 அணியில் இடம் பெறப் போகும் வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வுக் குழு தீவிரமாக இயங்கி வருகிறது. ஐபிஎல் போட்டிகளை தேர்வுக் குழு உறுப்பினர்கள் நேரில் கண்டு இந்திய டி20 அணிக்கான வீரர்கள் பட்டியலில் யாரை சேர்க்கலாம் என கண்காணித்து வருகின்றனர்.

அந்த அடிப்படையில் உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கிற்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம் என கூறப்படுகிறது. அவரை இந்திய டி20 அணியில் சேர்க்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு 38 வயதாகும் நிலையில் ஐபிஎல் தொடரைத் தவிர மற்ற நேரங்களில் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார் தினேஷ் கார்த்திக்.

IPL 2024 Dinesh Karthik might be selected in Indian team for T20 World Cup


இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என அவரே நம்பாத நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக்கின் ஃபார்ம் மற்ற எந்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை விடவும் சிறப்பாக உள்ளது. முன்னதாக ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோரில் இருவர் இந்திய டி20 அணியில் இடம் பெற்று டி20 உலகக்கோப்பை தொடருக்கு செல்லக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.

தற்போது அந்த பட்டியலில் தினேஷ் கார்த்திக் பெயரும் சேர்ந்துள்ளது. இந்த ஐந்து பேர் பட்டியலில் ரிஷப் பண்ட் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஓராண்டுக்கு முன் நடந்த விபத்துக்கு முன் இந்திய டி20 அணியின் நிரந்தர விக்கெட் கீப்பராக இருந்தார். அவர் 2024 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் 194 ரன்கள் குவித்துள்ளார். 123 பந்துகளை சந்தித்து அதில் 158 ஸ்ட்ரைக் ரேட்டில் 194 ரன்கள் எடுத்துள்ளார்.

அதே சமயம் சஞ்சு சாம்சன் 6 போட்டிகளில் 170 பந்துகளை சந்தித்து 155 ஸ்ட்ரைக் ரேட்டில் 264 ரன்கள் குவித்துள்ளார். இரண்டு முறை நாட் அவுட்டாக நின்று இருந்தார். பண்ட், சாம்சன் ஆகிய இருவரும் மூன்று மற்றும் நான்காவது வரிசையில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

அடுத்து ஜிதேஷ் சர்மா மோசமான ஃபார்மில் இருக்கிறார். எனவே, அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என கூறப்படுகிறது. இஷான் கிஷன் நன்றாகவே ஆடினாலும் அவர் கடந்த சில மாதங்களாக பிசிசிஐ அறிவுரையை ஏற்று உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் இருந்ததால் அவரை இந்திய அணியில் தேர்வு செய்ய மாட்டார்கள் என கூறப்படுகிறது.

எனவே, பெங்களூரு அணியின் ஃபினிஷராக அதிரடி ஆட்டம் ஆடி வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம் பெற வாய்ப்பு கிடைக்கக் கூடும். தினேஷ் கார்த்திக் இதுவரை 7 போட்டிகளில் 110 பந்துகளை சந்தித்து 205 ஸ்ட்ரைக் ரேட்டில் 226 ரன்கள் குவித்துள்ளார். மூன்று முறை நாட் அவுட்டாக நின்று இருக்கிறார். மேலும், தினேஷ் கார்த்திக் பல ஆண்டுகளாக ஃபினிஷராக ஆடிய அனுபவம் கொண்டவர் என்பதால் ரிஷப் பண்ட் அல்லது சஞ்சு சாம்சன் ஆகிய இருவரில் ஒருவரையும், மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக்கையும் அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.

2024 ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் ஃபினிஷராக கருதப்படும் ரிங்கு சிங் இன்னும் சரியான செயல்பாட்டை வெளிப்படுத்தாத நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் ஃபினிஷராக இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவித்து இருப்பதால் இவர் தான் இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பை பெற்றுக் கொடுக்கப் போகும் ஃபினிஷர் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.

Story first published: Tuesday, April 16, 2024, 16:42 [IST]
Other articles published on Apr 16, 2024
English summary
IPL 2024 : Dinesh Karthik might be selected in Indian team for T20 World Cup
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+