அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் எலிமினேட்டர் போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்ட ஆர்சிபி அணி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது. ஐபிஎல் கோப்பையை வென்றது போல் ஆர் சி பி அணி வீரர்கள் சிஎஸ்கே அணியை தோற்கடித்து விட்டு கொண்டாடினர்.
மேலும் ஆர்சிபி ரசிகர்களும் வானத்திற்கும், பூமிக்கும் குதித்து கொண்டாடினார்கள். அப்போதே கோப்பையை வெல்ல கொண்டாட்டத்தை மிச்சம் வையுங்கள் என்று பலரும் அறிவுறுத்தினார்கள். இந்த நிலையில் அகமதாபாத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய ஆர் சி பி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டுபிளசிஸ் 17 ரன்களிலும், நட்சத்திர வீரர் விராட் கோலி 33 ரன்களும் ஆட்டம் இழந்தனர். கேமரன் கிரீன் 27 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த நிலையில் தனி ஆளாக நின்று ரஜத் பட்டிதார் 22 பந்துகளில் 34 ரன்கள் சேர்க்க நிலையில், மகிபால் 17 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் தினேஷ் கார்த்திக் 11 ரன்கள் சேர்த்த நிலையில், ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் பந்து வீச்சு தரப்பில் ஆவேஷ் கான் மூன்று விக்கெட்டுகளையும்,அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை அடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.
தொடக்க வீரராக களம் இறங்கிய டாம் கோலர் 20 எடுத்த நிலையில், ரியான் பராக் பந்துவீச்சில் போல்ட் ஆனார். இன்னும் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 30 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதே போன்று அதிரடி வீரர் துருவ் ஜூரல் 8 ரன்களில் வெளியேற, ரியான் பராக், ஹேட்மயர் ஜோடி அதிரடியாக விளையாடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி அருகே அழைத்து சென்றது. முக்கிய கட்டத்தில் 36 ரன்களில் பராக் வெளியேற இறுதியில் ராஜஸ்தானி 6 பந்துகள் எஞ்சிய நிலையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்றது. அதன் மூலம் ஆர் சி பி அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை 17 வது முறையாக தவற விட்டு வெளியேறி இருக்கிறது.