Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ இல்ல, உன் எரியாவில் இருக்கிற எவனுக்கும் கல்யாணம் நடக்காது.. கோலிக்கும், IPL-க்கும் 7ஆம் பொருத்தம்

மும்பை : ஐபிஎல் தொடரில் விராட் கோலி, ஆர் சி பி அணிக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் சீசனில் இருந்து விளையாடி வருகிறார். தற்போது 17 சீசன் ஆகி இருக்கிறது 2008 ஆம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்திருந்தால் இந்நேரம் அது கல்லூரிக்கு சென்று இருக்கும்.

ஆனால் விராட் கோலி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த நிலையில் விராட் கோலிக்கும் ஐபிஎல் கோப்பைக்கும் ஏழாம் பொருத்தம் இருப்பதாக ரசிகர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

IPL 2024 - Fans trolls teams related to virat kohli is not winning the ipl championship

விராட் கோலி ஐபிஎல் சீசனில் இதுவரை அதிக ரன்கள் எடுத்திருக்கிறார். இவ்வளவு சாதனை செய்தும் அவரால் ஏன் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை என்ற கேள்வி எப்போதுமே இருக்கிறது. இதற்கு காரணம் விராட் கோலி தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடி வருகிறார் என்று குற்றச்சாட்டு வந்துள்ளது.

ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தாமல் சதம், அரை சதம் அடிக்க வேண்டும் என்ற நோக்கில் விராட் கோலி இருப்பதாகவும் கிரிக்கெட் விமர்சனங்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விராட் கோலி தொடர்புடைய எந்த ஊரும் ஐபிஎல் கோப்பையில் வெல்லவில்லை என்று தெரிகிறது. விராட் கோலி டெல்லியில் பிறந்து வளர்ந்து இருக்கிறார்.

இதனால் டெல்லி அணியும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. விராட் கோலியின் பூர்வீகம் பஞ்சாப் என்று கூறப்படுகிறது. இதனால் பஞ்சாப்பும் இதுவரை ஐபிஎல் தொடரை வெல்லவில்லை. இதேபோன்று பெங்களூர் அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். பெங்களூர் அணியும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வில்லை.

இந்த மூன்று அணி தான் சாம்பியன் பட்டத்தை கைபற்றாமல் இருக்கின்றது. இதேபோன்று விராட் கோலி கடந்த 2021 ஆம் ஆண்டு மும்பைக்கு குடியேறி இருக்கிறார். விராட் கோலி மும்பைக்கு சென்றதிலிருந்து அந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இதை காரணம் காட்டி விராட் கோலியை ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் ஆர்சிபியின் தந்தை சிஎஸ்கே தான் என்ற ஹாஷ்டாக எக்ஸ் தளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Story first published: Friday, May 24, 2024, 14:53 [IST]
Other articles published on May 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+