Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் - இதுவரை அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்து கோப்பையை வெல்லாத வீரர்கள்.. முதலிடம் யாருக்கு?

மும்பை : ஐபிஎல் தொடரில் பட்டத்தை வெல்வது என்பது அவ்வளவு சவாலான காரியம் கிடையாது. இதுவரை பல கேப்டன்கள் ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று தவம் கிடக்கிறார்கள். ஆனால் அந்த பாக்கியம் பலருக்கு கிடைப்பதில்லை.

இந்த நிலையில் ஐபிஎல் கோப்பையை வெல்ல 69 போட்டிகள் வரை காத்திருந்த ஸ்ரேயாஸ்க்கு 70 வது போட்டியில் அதிர்ஷ்டம் அடித்து தற்போது அவர் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார்.ஆனால் ஐபிஎல் கோப்பையில் தோனி ரோகித் சர்மா போன்ற வீரர்கள் ஐந்து முறை கைப்பற்றி அசத்தியிருக்கிறார்கள்.

IPL 2024 Final- Most matches as Captain without Winning IPL Trophy

ஆனால் இந்த கோப்பையை ஒரு முறை கூட வெல்லாத கேப்டன்கள் பல போட்டிகளாக இருந்து வருகிறார்கள். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம். இதுவரை அதிகப் போட்டிகளில் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையில் வெல்லாத வீரர்கள் பட்டியலில் விராட் கோலி தான் முதலிடத்தில் இருக்கிறார். விராட் கோலி இதுவரை 143 போட்டிகளில் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வெல்லாமல் இருக்கிறார்.

IPL 2024 Final- Most matches as Captain without Winning IPL Trophy

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் கே.எல். ராகுல் இருக்கிறார். ராகுல் இதுவரை 64 போட்டிகளில் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையில் வெல்லாமல் இருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சுஸ் சாம்சன் இருக்கிறார். இவர் 61 போட்டிகளில் கேப்டனாக இருந்து சாம்பியன் பட்டத்தை வெல்லாமல் போனார்.

இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் அதிரடி வீரர் சேவாக் இருக்கிறார். சேவாக் 53 போட்டிகளில் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வெல்லாமல் போனார். இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். இவர் 51 போட்டிகளில் கேப்டனாக இருந்து ஐபில் கோப்பையில் வெல்லாமல் போனார்.

IPL 2024 Final- Most matches as Captain without Winning IPL Trophy

இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இருக்கிறார். டிராவிட் 48 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையில் வெல்லாமல் போனார். இதேபோன்று குறைந்த போட்டிகளில் கேப்டனாக இருந்து ஐபிஎல் கோப்பையை வென்ற வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா 13 போட்டிகளுடன் முதல் இடத்திலும், ஹர்திக் பாண்டியா 15 போட்டிகளுடன் இரண்டாவது இடத்திலும் வார்னே15 போட்டிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இந்த பட்டியலில் தோனி 43 போட்டிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.

Story first published: Monday, May 27, 2024, 9:10 [IST]
Other articles published on May 27, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+