சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரில் சாம்பியன் பட்டத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியிருக்கிறது. இதன் மூலம் இம்முறை தொடரை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணிக்கு கடும் சோகம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சீசன் முழுவதும் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கில் பட்டையை கிளப்பியது. மேலும் பந்துவீச்சிலும் முக்கிய கட்டத்தில் அந்த அணி வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். யாருமே எதிர்பார்க்காத வகையில் இந்த சீசனில் 260 ரன்கக்கு மேல் எல்லாம் எடுத்து அனைத்து அணி பவுலர்களையும் கதிகலங்க வைத்தார்கள்.

கடந்த சீசன் எல்லாம் சன்ரைசர்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வந்தது. இதனால் அந்த அணியின் உரிமையாளரான காவியா மாறன், எப்போதுமே சோகத்தில் இருப்பார். இதனால் நடிகர் ரஜினிகாந்த் அணியை பலமாக மாற்றுங்கள், காவியாவை சோகமாக பார்க்க சங்கடமாக இருக்கிறது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தது பாட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக வந்ததிலிருந்து சன்ரைசர்ஸ் அணி புத்துணர்ச்சி பெற்றது. இந்த சீசன் முழுவதுமே சன்ரைசர்ஸ் நன்றாக விளையாடியதால், காவியா மாறன் எப்போதுமே ஹாப்பி மோடில் இருந்தார். இதனால் சாம்பியன் பட்டத்தை சன்ரைசர்ஸ் அணி வென்றவுடன் காவியா மாறன் என்ன செய்வார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.
ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் கொல்கத்தா அணி இறுதிப் போட்டியில் அபாரமாக விளையாடி எளிதாக சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. இதனால் சோகம் அடைந்த சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளர் காவியா மாறன் எழுந்து நின்று கைதட்டினார். பிறகு திடீரென்று தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டு கண்களால் கையை மூடி தன்னுடைய கண்ணீரைத் துடைத்தார்.
அப்போது அவர் அருகே இருந்த தாய் காவியா மாறனை சமாதானப்படுத்த அவர் மீண்டும் திரும்பிக் கொண்டு கைத்தட்டி கொல்கத்தா அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். காவியா மாறன் கண் கலங்கிய சம்பவம் ரசிகர்களை கவலை அடைய செய்திருக்கிறது. மேலும் இந்த சீசன் முழுவதும் எதிரணியை பார்த்து வாயை மூடுங்கள் என செய்கை செய்து கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கும் தற்போது இறுதிப் போட்டியில் தக்க பதிலடி கொடுத்திருக்கிறது.