Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால், பிசிசிஐயின் வரலாற்று பிழையாக இருந்திருக்கும்- கவுதம் கம்பீர்

மும்பை : பிசிசிஐ இதை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் அது வரலாற்றுப் பிழையாக இருந்திருக்கும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தனியார் சேனல் ஒன்றுக்கு கவுதம் கம்பீர் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

அதில் இப்படி நடக்கவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் என்பது குறித்து பல கேள்விகள் கம்பீரிடம் கேட்கப்பட்டது. அதில் பங்கேற்ற நெறியாளர் கம்பீரிடம், பிசிசிஐ ஐபிஎல் தொடரை தொடங்கவில்லை என்றால் அது எப்படி இருந்திருக்கும் என்று கேள்வி கேட்டார்.

IPL 2024 - Gautam Gambhir says it would be Worst mistake by BCCI


இதற்கு பதில் அளித்த கம்பீர், ஐபிஎல் தொடர் மற்றும் தொடங்கப்படாமல் இருந்திருந்தால் அது ஒரு வரலாற்றுப் பிழையாக இருந்திருக்கும். இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த நல்ல விஷயம் என்றால் அது ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டது தான் என்றும் கம்பீர் கூறியுள்ளார். இதை அடுத்து நீங்கள் கிரிக்கெட் வீரராக ஆகவில்லை என்றால் என்னவாக மாறி இருப்பீர்கள் என்று கம்பீரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு தான் ராணுவத்தில் சேர்ந்திருப்பேன் என்று கூறியுள்ளார். பேட்டிங் பயிற்சியாளராக இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கம்பீரிடம் கேட்கப்பட்டது. அதற்கு தற்போது எனக்கு நிறைய பணிகள் இருக்கிறது. இதனால் அது குறித்து யோசிக்கவில்லை. வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று பதில் அளித்தார்.

உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மேக்ஸ்வெல் அடித்த பந்தை முஜிபுர் ரஹ்மான் கேட்ச் பிடித்திருந்தால் உலகக் கோப்பையின் முடிவு என்னவாக மாறியிருக்கும் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த கம்பீர், அந்த போட்டியில் ஆப்கானிஸ்தானுடன் ஆஸ்திரேலியா தோல்வியை தழுவி இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்து இருப்பார்கள்.

இதனால் ஆஸ்திரேலியா தான் மீண்டும் வெற்றி பெற்றிருக்கும் என்றும் கம்பீர் கூறியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக கம்பீர் உள்ள நிலையில் தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ அணியிலிருந்து கொல்கத்தா அணிக்கு சென்று அங்கு மென்டராக இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கம்பீரின் அறிவுறுத்தலால் மிட்செல் ஸ்டார்க்கிற்கு 24.75 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா அவரை ஏலத்தில் எடுத்தது.

Story first published: Sunday, December 24, 2023, 14:57 [IST]
Other articles published on Dec 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+