For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

CSK-க்கு எச்சரிக்கை கொடுத்த தோனியின் நண்பர்.. இந்த வீரர் பட்டையை கிளப்புவார்.. பாத்துக்கிட்டே இருங்க

அகமதாபாத் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 59வது லீகாட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியும் இந்த முறை பைனலுக்கு சென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகிறது. புள்ளி பட்டியலில் குஜராத் அணி தற்போது கடைசி இடத்தில் இருக்கிறது.

எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளின் உதவி கிடைத்தால் மட்டுமே குஜராத் அணியால் விளையாட்டுக்கு சொல்ல முடியும். இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக குஜராத் தோற்றால் தொடரை விட்டு வெளியேறிவிடலாம்.

IPL 2024 - GT Batting coach Gary kristen gives warning to csk


இந்த நிலையில் குஜராத் அணியின் கேப்டன் கில், நடப்பு தொடரில் மோசமாக விளையாடி வருகிறார். இதனால் டி20 உலக கோப்பையில் வெறும் ரிசர்வ் வீரராக தான் கில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடந்த 5 போட்டிகளில் ஒற்றை இலக்கம் ரன்களில் தான் ஆட்டம் இழந்தார். அதில், கில் அடித்த அதிகபட்ச ஸ்கோர் 35 ரன்கள் தான்.

இதனால் கேப்டன்ஷிப் கில்லின் ஆட்டத்தை பாதிப்படைய செய்து இருக்கிறதா என்று சந்தேகம் இருந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன், தன்னுடைய கேப்டன் பதவியை மகிழ்ச்சியுடன் செய்வதாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், எனினும் கேப்டனாக அவர் கைதேர்ந்து வளர கொஞ்சம் நேரம் பிடிக்கலாம். ஆனால் இந்த சீசனை அவர் மகிழ்ச்சியுடன் தான் விளையாடி வருகிறார். இதில் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் அவர் அடுத்த மூன்று போட்டிகளில் நிச்சயம் இரண்டு மிகப்பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நான் நம்புகிறேன்.

நீங்கள் பார்த்துக் கொண்டே இருங்கள் நிச்சயம். அவர் பேட்டையில் ஜொலிப்பார் எங்களது அணியில் முகமது சமி தற்போது இல்லாதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. நாங்கள் சமியை மிஸ் செய்கின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் எங்களுக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்திருக்கிறார். சமி போன்ற வீரரின் இடத்திற்கு வேறு ஒருவர் வருவது என்பது மிகவும் கடினமான விஷயமாகும்.

பவர் பிளேவில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எங்கள் அணியில் இளம் பவுலர்கள் தான் இருக்கிறார்கள். சிக்ஸர்கள் அடிக்கும் பேட்ஸ்மன்களுக்கு எதிராக அவர்கள் தங்களுடைய ஆட்டத்தை சரி செய்து கொள்ள கொஞ்சம் காலம் பிடிக்கும். அகமதாபாத் ஆடுகளம் முதலில் கொஞ்சம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இதனை பயன்படுத்திக் கொண்டு எங்களுடைய வீரர்கள் முதலில் சில விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆட்டமே மாறிவிடும்.

நாங்கள் எப்போதும் போல் விளையாடும் கிரிக்கெட்டை நடப்பு சீசனில் விளையாடவில்லை. கடந்த காலங்களில் இருந்த விளையாட்டுத் திறன் இந்த சீசனில் எடுபடவில்லை. எனினும் கடைசி மூன்று போட்டிகளில் நாங்கள் நல்லது கிரிக்கெட்டை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். நாளை ஆட்டத்தில் பவர் பிளே மிகவும் முக்கியம். அதில் எங்களுடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேரி கிறிஸ்டன் கூறியுள்ளார்.

Story first published: Friday, May 10, 2024, 7:58 [IST]
Other articles published on May 10, 2024
English summary
IPL 2024 - GT Batting coach Gary kristen gives warning to csk CSK-க்கு எச்சரிக்கை கொடுத்த தோனியின் நண்பர்.. இந்த வீரர் பட்டையை கிளப்புவார்.. பாத்துக்கிட்டே இருங்க
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+