Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மும்பை இந்தியன்ஸ் தப்பு செய்வாங்கனு தெரியும்..15 ரன் கம்மியா அடிச்சும் ஜெயிச்சிட்டோம் -சுப்மன் கில்

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக முதன்முறையாக களமிறங்கிய சுப்மன் கில்,பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறார். அதுவும் மும்பை போன்ற பலம் வாய்ந்த பேட்டிக்கு எதிராக 168 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் சிறப்பாக பந்து வீசி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குஜராத் அணியின் கேப்டன் கில், எங்களுடைய அணி வீரர்கள் பரபரப்பான கட்டத்திலும் பதற்றம் அடையாமல் விளையாடி இருக்கிறார்கள்.

IPL 2024 - GT captain Shubman gill says He knows Mumbai will commit mistake

நாங்கள் இறுதி கட்ட ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினோம். அதுவும் ஆடுகளத்தில் நாங்கள் பந்து வீசும் போது பணி பெய்தது. இந்த சூழலில் பந்து வீசுவது மிகவும் கடினம். ஆனால் அதையும் மீறி எங்களுடைய சுழற் பந்துவீச்சாளர்கள் வீசிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது. இதன் மூலம் நாங்கள் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்து நாங்களும் போட்டியிலே இருந்தோம்.

டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களுக்கு நாம் எப்போதுமே நெருக்கடியை கொடுக்க வேண்டும். அந்த விதத்தில் மோகித் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவருடைய பார்ம் இந்த சீசன் முழுவதும் தொடரும் என்று நம்புகிறேன். நாங்கள் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நெருக்கடி கொடுத்தோம்.

இப்படி செய்யும் பட்சத்தில் மும்பை அணி நிச்சயமாக தவறு செய்யும் என்று எனக்கு தெரியும். இந்த ஆடுகளத்தில் 170 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் நாங்கள் 10, 15 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். எனினும் இப்படி குறைவாக அடித்தும் நாங்கள் சிறப்பாக பந்து வீசி வெற்றி பெற்றிருக்கிறோம்.ஆடுகளமும் கொஞ்சம் தோய்வாக மாறியது. இதனால் மும்பை வீரர்கள் ரன்களை அடிக்க கஷ்டப்பட்டார்கள் என குஜராத் கேப்டன் கில் கூறியுள்ளார்.

Story first published: Monday, March 25, 2024, 6:28 [IST]
Other articles published on Mar 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+