Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உன்ன நம்பி நான் கெட்டேன் கதை தான்! சிஎஸ்கேவின் கேவலமான பிளான்! இது வேலைக்கே ஆகாது

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மோசமான திட்டத்தை வகுத்து விளையாடியதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் இருந்தது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகும். தோல்வி அடைந்தால் சிஎஸ்கே வின் ப்ளே ஆஃப் வாய்ப்புக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் ரஹானேவுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி வருவது ரசிகர்களை எரிச்சல் அடைய செய்திருக்கிறது.

IPL 2024 GT vs CSK - Poor strategy by chennai super kings by allowing rahane as impact player

இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அப்போது பிளேயிங் லெவனில் இந்திய அணியின் அனுபவ வீரரான இடம் பெறவில்லை. இதை பார்த்தவுடன் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திராகவும் ருதுராஜ் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் சிஎஸ்கேவுக்கு புத்தி வந்து விட்டது என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் சிஎஸ்கே அணி 232 ரன்கள் என்ற இலக்கை துரத்த பேட்டிங் செய்யும்போது திடீரென்று தொடக்க வீரராக ரச்சின் ரவீந்தராவுடன் அனுபவ வீரர் ரஹானே களமிறங்கினார். இதை பார்த்தவுடன் சிஎஸ்கே ரசிகர்கள் ஷாக் ஆனர்கள். ரஹானே இல்லை என்று நினைத்தோமே, ஆனால் இம்பேக்ட் வீரராக ரகானே களமிறங்கியதை அவர்கள் கனவு கூட நினைத்து பார்க்கவில்லை.

இம்பேக்ட் வீரராக களம் இறங்கிய ரகானே சிஎஸ்கேவுக்கு இம்பேக்ட்டை ஏற்படுத்துவார் என்று பார்த்தால் குஜராத் அணிக்காக விளையாடுவது போல் ஐந்து பந்துகளில் வெறும் ஒரு ரன் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார்.இதனால் ரஹானேவுக்கு தனது இடத்தை கொடுத்துவிட்டு மூன்றாவது வீரராக களம் இறங்கி மூன்று பந்துகளை எதிர்கொண்டு டக் அவுட் ஆனார்.

இதனால் சிஎஸ்கே அணி 10 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட் இழந்து தடுமாறியது. ஒழுங்காக விளையாடிக் கொண்டிருக்கும் ரகானே தேவையில்லாமல் சிஎஸ்கே அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது மோசமான யுக்தி என்றும் ரசிகர்கள் குறை கூறியுள்ளனர்.

Story first published: Friday, May 10, 2024, 22:58 [IST]
Other articles published on May 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+