Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

GT vs DC : டெல்லி வைத்த ஆப்பு.. ஐபிஎல் தொடரின் மோசமான ஸ்கோரை பதிவு செய்த குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரி மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் படுமோசமாக பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி வெறும் 89 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.

டெல்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டது துவக்கம் முதலே அந்த அணியின் பந்துவீச்சு திட்டம் சரியாக வேலை செய்தது. பவர் பிளே ஓவர்களுக்குள் குஜராத் அணியின் நான்கு விக்கெட்களை வீழ்த்திய டெல்லி அணி, ஒரு கட்டத்தில் குஜராத் அணியை 48 ரன்களுக்கு 6 விக்கெட்கள் என்ற நிலைக்கு தள்ளியது.

IPL 2024 GT vs DC Gujarat Titans registered their lowest total in IPL history

அதன் பின் குஜராத் அணியை காப்பாற்ற போராடிய ரஷித் கான் 31 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து அந்த அணி 17.3 ஓவர்களில் 89 ரன்கள் எடுத்து அனைத்து விகேட்களையும் இழந்தது. 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோர் ஆகும். மேலும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிக மோசமான ஸ்கோர் இதுவே ஆகும். இதுவரை ஐபிஎல் தொடர்களில் எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோர்கள் பட்டியலில் குஜராத் அணியின் 89 ரன்கள் 27வது இடத்தை பிடித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்க்ஸில் எடுக்கப்பட்ட குறைந்த ரன்களின் பட்டியல் :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 49 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2017)

ராஜஸ்தான் ராயல்ஸ் 58 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2009)

ராஜஸ்தான் ராயல்ஸ் 59 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2023)

டெல்லி டேர்டெவில்ஸ் 66 vs மும்பை இந்தியன்ஸ் (2017)

டெல்லி டேர்டெவில்ஸ் 67 vs கிங்ஸ் XI பஞ்சாப் (2017)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 67 vs மும்பை இந்தியன்ஸ் (2008)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 68 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2022)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்70 vs சென்னை சூப்பர் கிங்ஸ் (2019)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 70 vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2014)

கிங்ஸ் XI பஞ்சாப் 73 vs ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் (2017)

கொச்சி டஸ்கர்ஸ் கேரளா 74 vs டெக்கான் சார்ஜர்ஸ் (2011)

சென்னை சூப்பர் கிங்ஸ் 79 vs மும்பை இந்தியன்ஸ் (2013)

டெல்லி டேர்டெவில்ஸ் 80 vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013)

ராஜஸ்தான் ராயல்ஸ் 81 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2011)

டெக்கான் சார்ஜர்ஸ் 82 எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2010)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 82 vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2008)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 82 vs குஜராத் டைட்டன்ஸ் (2022)

டெல்லி டேர்டெவில்ஸ் 83 vs சென்னை சூப்பர் கிங்ஸ் (2013)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 84/8 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (2020)

டெல்லி டேர்டெவில்ஸ் 84 v சென்னை சூப்பர் கிங்ஸ் (2014)

ராஜஸ்தான் ராயல்ஸ் 85 v கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2021)

மும்பை இந்தியன்ஸ் 87 எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2018)

டெல்லி டேர்டெவில்ஸ் 87 vs ராஜஸ்தான் ராயல்ஸ் (2008)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 87 vs சென்னை சூப்பர் கிங்ஸ் (2009)

மும்பை இந்தியன்ஸ் 87 vs கிங்ஸ் XI பஞ்சாப் (2011)

கிங்ஸ் XI பஞ்சாப் 88 v ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2018)

கிங்ஸ் XI பஞ்சாப் 88 vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2015)

குஜராத் டைட்டன்ஸ் 89 எதிராக டெல்லி கேபிடல்ஸ் (2024)*

Story first published: Wednesday, April 17, 2024, 22:16 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+