Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்

அகமதாபாத் : டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இளம் ஆஸ்திரேலிய வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் களமிறங்காத நிலையில், ஜேக் ஃபிரேசர் துவக்க வீரராக இறங்கினார். முந்தைய போட்டியில் 35 பந்துகளில் 55 ரன்கள் குவித்து இருந்த அவர் இந்தப் போட்டியில் 10 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

IPL 2024 GT vs DC Jake Fraser McGurk talks about Rikcy Ponting

முந்தைய போட்டியிலும் தனது முதல் பந்தில் சிக்ஸ் அடித்த அவர், இந்தப் போட்டியிலும் முதல் பந்தில் சிக்ஸ் அடித்து ஆட்டத்தை துவங்கினார். இந்தப் போட்டியில் வெறும் 90 ரன்களை சேஸிங் செய்த டெல்லி அணி அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிரடி ஆட்டம் ஆடியது. அதற்கு உதவும் வகையில் பிரேசர் அதிரடியாக ஆடி விக்கெட்டை விரைவாக இழந்தார்.

அதே போல, 22 வயதே ஆன ஆஸ்திரேலிய வீரரான ஜேக் ஃபிரேசர், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் அருகிலேயே அமர்ந்து இருந்தார். போட்டிக்கு பின் அது குறித்தும் பேசி இருந்தார்.

"இந்தப் போட்டியில் நல்ல துவக்கத்தை அளிக்க விரும்பினேன். அதன் மூலம் நெட் ரன் ரேட் எங்களுக்கு சாதகமாக ஆக்க நினைத்தேன். இப்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் அதை முயற்சி செய்ய வேண்டும். அதை நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும். இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்டிங் எளிதாக இருந்தது" என்றார் ஜேக்.

மேலும், ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் உடன் ஒன்றாக அமர்ந்து இருப்பது குறித்து கேட்ட போது, "அது நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது. அவருடன் நாம் விளையாடுகிறோமா? என நம்மை நாமே கிள்ளிக் கொள்ள வேண்டும். ரிக்கி பாண்டிங்கின் கடைசி டெஸ்ட் போட்டியில் நாதன் லியோன் இதே போல பேசியது எனக்கு நினைவு இருக்கிறது." என்றார் ஜேக் ஃபிரேசர்.

Story first published: Wednesday, April 17, 2024, 23:52 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+