Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : தோனியாக மாறிய ரிஷப் பண்ட்.. ஒரே ஓவரில் சரிந்த குஜராத் டைட்டன்ஸ்.. அடுத்தடுத்து நடந்த மேஜிக்

அகமதாபாத் : 2024 ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங்கில் அபாரமாக செயல்பட்டு தோனியாக மாறி ஒரே ஓவரில் இரண்டு ஸ்டம்பிங் செய்தார்.

குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி கேபிடல்ஸ். அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இந்தப் போட்டியில் பந்துவீச்சாளர்களை சிறப்பாக பயன்படுத்தினார். அத்துடன் அவர்களுடன் தொடர்ந்து பேசி ஆலோசனைகளை கூறினார்.

IPL 2024 GT vs DC Rishabh Pant help taking 2 wickets with two stumpings

கேப்டன் ரிஷப் பண்ட்டின் ஆதரவு இருந்த நிலையில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஆதிக்கம் செலுத்தினர். முதல் ஐந்து ஓவர்களில் குஜராத் அணியின் 4 விக்கெட்களை வீழ்த்தியது டெல்லி அணி. கலீல் அஹ்மது 1 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர். சுமித் குமார் ரன் அவுட் மூலம் சாய் சுதர்ஷன் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.

இன்னும் சில விக்கெட்களை வீழ்த்தினால் குஜராத் அணி பெரிய ஸ்கோரை எட்ட முடியாத நிலை ஏற்படும் என்ற நிலையில் ரிஷப் பண்ட் சுழற் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரையும் பயன்படுத்தினார். குல்தீப் யாதப் ஓவரில் ஒரு முறை ஸ்டம்பிங் முயற்சியை செய்தார். ஆனால், அப்போது பேட்ஸ்மேன் கிரீசுக்கு உள்ளே நின்றதால் அம்பயர் அவுட் இல்லை என அறிவித்தார்.

அடுத்த ஓவரை ஸ்டப்ஸ் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் செய்து குஜராத் அணியின் அபினவ் மனோகரை அவுட் ஆக்கினார். அபினவ் ஒரு இன்ச் அளவுக்கே கிரீஸை விட்டு வெளியே நின்று இருந்தார். அதை சரியாக பயன்படுத்தி ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் செய்தார்.

அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் ஷாருக் கான் தனது முதல் பந்தில் பெரிய ஷாட் ஆட முடிவு செய்து கிரீஸை விட்டு வெளியே வந்தார். ஆனால், பந்து ரிஷப் பண்ட் கைகளுக்கு சென்று, அவரது கிளவுஸில் இருந்து எகிறி ஸ்டம்ப்பில் பட்டது. பண்ட் ஸ்டம்பிங் செய்ய வந்த நிலையில் பந்து தானே ஸ்டம்ப்பில் பட்டது. இதை அடுத்து ஒரே ஓவரில் இரண்டு ஸ்டம்ப்பிங் செய்து அசத்தினார் பண்ட்.

குஜராத் அணி 48 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து பெரும் சரிவில் சிக்கியது. அதன் பின் ரஷித் கான் 31 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து சென்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Story first published: Wednesday, April 17, 2024, 21:44 [IST]
Other articles published on Apr 17, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+