For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜஸ்ட் மிஸ்ஸான சதம்.. பஞ்சாப் பவுலர்களை பஞ்சராக்கிய சுப்மன் கில்.. மரண மாஸ் காட்டிய டிவாட்டியா!

அகமதாபாத் : குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் குஜராத் அணி தரப்பில் கேப்டன் சுப்மன் கில் - சாஹா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஸ்பின்னர் ஹர்ப்ரீத் சிங் பரார் வீச, அந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து அதிரடியாக தொடங்கினார் சுப்மன் கில்.

IPL 2024 Gt vs PBKS Gujarat titans set a target of 200 runs for Punjab to win at Ahmedabad

தொடர்ந்து அதிரடியாக 2 பவுண்டரிகளை விளாசிய சாஹா, ரபாடா பவுலிங்கில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினர். இதன்பின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் களமிறங்கினார். இதன்பின் சுப்ம்ன கில் - கேன் வில்லியம்சன் கூட்டணி தேவைக்கேற்ப கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் பவுண்டரிகளை விளாசி வந்தனர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 52 ரன்கள் சேர்த்தது. பெரிய இன்னிங்ஸை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதன்பின் சுப்மன் கில் - சாய் சுதர்சன் கூட்டணி இணைந்து அதிரடியாக ரன்களை குவிக்க தொடங்கியது. ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும் என்று வெளுத்து கட்டினர். சிக்கந்தர் ராசா ஓவரில் 3 பவுண்டரிகள் விளாசப்பட்ட நிலையில், ரபாடா பவுலிங்கில் 14 ரன்கள் விளாசப்பட்டது. இந்த நிலையில் சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 19 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் சுப்மன் கில் உடன் மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் இணைந்தார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் அடிக்க, குஜராத் அணி 16 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்கள் சேர்த்திருந்தது. பின்னர் ஹர்சல் படேல் வீசிய 17வது ஓவரில் ஒரு சிக்ஸ் உட்பட 12 ரன்கள் சேர்க்கப்பட, ரபாடா வீசிய 18வது ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த ஓவரில் சிக்சர் அடிக்க முயன்று விஜய் சங்கர் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் அதிரடி வீரர் ராகுல் டிவாட்டியா களமிறங்க ஆட்டம் பரபரப்பானது.

இதன்பின் 19வது ஓவரை வீச மீண்டும் ஹர்சல் படேல் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 3 ஒய்டுகள் உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது. பின்னர் கடைசி ஓவரை வீச அர்ஷ்தீப் சிங் வந்தார். இந்த ஓவரில் 2 பவுண்டரிகள் உட்பட 13 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 48 பந்துகளில் 4 சிக்ஸ், 6 ஃபோர்ஸ் உட்பட 89 ரன்களையும், ராகுல் டிவாட்டியா 8 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 23 ரன்களையும் விளாசினர்.

Story first published: Thursday, April 4, 2024, 21:25 [IST]
Other articles published on Apr 4, 2024
English summary
IPL 2024 Gt vs PBKS : Gujarat titans set a target of 200 runs for Punjab to win at Ahmedabad
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+