Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாமே அதுக்கு தான்.. விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்டில் பிரச்சனை இல்லை.. சீனுக்குள் வந்த கம்பீர்!

கொல்கத்தா : விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையில், கொல்கத்தா அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி - கேகேஆர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விராட் கோலி - கவுதம் கம்பீர் இருவரும் நட்புடன் கட்டியணைத்து அன்பை பரிமாறினர். கடந்த சீசனில் களத்திலேயே மோதிக் கொண்ட இருவரும் நண்பர்களாகினர். இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த விவகாரம் குறித்து கவுதம் கம்பீர் மனம் திறந்துள்ளார்.

IPL 2024 GT vs RCB Virat Kohli strike rate is not a problem ultimately winning is important says Gautam Gambhir

அதில், விராட் கோலியிடம் இருந்து டான்ஸ் ஆட கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் நான் நினைத்தாலும், அவரை போல் ஒரு ஸ்டப்பை கூட ஆட முடியாது. இருந்தாலும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அண்மையில் நாங்கள் நட்பு பாராட்டியது பற்றி விராட் கோலி சொன்னது சரிதான். நாங்கள் கட்டிப்பிடித்த கொண்டதால், சில மசாலா செய்திகளை தொலைக்காட்சிகள் இழந்துவிட்டது.

இவையனைத்தும் டிஆர்பி-க்காக தான் பெரிதாக்கப்படுகின்றன.நான் எப்படியான மனிதன், விராட் கோலி எப்படியான மனிதர் என்பதை பற்றி மீடியாக்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால் ஒரு ஹைப் உருவாக்குகிறார்கள். அதனை பாசிட்டிவாக செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். அதேபோல் எங்கள் இருவரின் வாழ்க்கைக்குள் யாரும் வருவதற்கு உரிமை கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்த ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விமர்சனங்கள் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு, ஒவ்வொரு வீரருக்கும் பிரத்யேக ஸ்டைல் உள்ளது. மேக்ஸ்வெல் செய்வதை விராட் கோலியாலோ, விராட் கோலி செய்வதை மேக்ஸ்வெல்-னாலோ செய்ய முடியாது. பிளேயிங் லெவனில் அனைத்து விதமான பேட்ஸ்மேன்களும் இருக்க வேண்டும். நம்பர் 1 முதல் நம்பர் 8 வரை அதிரடியான பேட்ஸ்மேன்களை நிரப்பிக் கொள்ளலாம்.

அப்போது பேட்ஸ்மேன்கள் சில போட்டிகளில் 300 ரன்களை கூட அடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் 30 ரன்களிலும் ஆல் அவுட்டாக வாய்ப்புகள் உள்ளது. நமது அணி வெற்றிபெறும் போது 100 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினால் கூட பிரச்சனையில்லை. ஆனால் தோல்வியடையும் போது 180 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடினாலும் பிரயோஜனமில்லை. அதுதான் கள நிலவரம். ஸ்ட்ரைக் ரேட் என்பது பிட்ச், மைதானம், ஆட்டத்தின் சூழலை பொறுத்தது. அதனால் ஸ்ட்ரைக் ரேட்டை கடந்து வெற்றி தான் எப்போதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Sunday, April 28, 2024, 16:10 [IST]
Other articles published on Apr 28, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+