ஐபிஎல் ஆல்-டைம் அணி.. கழட்டி விடப்பட்ட ரோஹித் சர்மா.. அப்ப தோனி, கோலிக்கு இடம் இருக்கா?
மும்பை : ஐபிஎல் தொடரின் சிறந்த அணியை தேர்வு செய்து வெளியிட்டு இருக்கிறது அந்த தொடரை ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி. மூன்று விதமான குழுக்களின் மூலம் மூன்று வெவ்வேறு சிறந்த ஐபிஎல் ஆல்-டைம் அணித் தேர்வு செய்யப்பட்டது.
பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஒரு அணியும், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் ஒரு அணியும், 16 லட்சம் ரசிகர்கள் தேர்வு செய்த ஒரு அணி என மூன்று அணிகளை அறிவித்து இருக்கிறது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

அந்த மூன்று அணிகளிலும் சில வீரர்கள் மட்டும் இடம் பெற்று இருந்தனர். ஆனால், அந்த மூன்று அணிகளின் பிளேயிங் லெவனிலும் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை என்பது தான் ஆச்சரியம். அதே சமயம், விராட் கோலி அந்த மூன்று அணிகளிலும் துவக்க வீரராக இடம் பெற்று இருக்கிறார். தோனி அந்த மூன்று அணிகளிலும் இடம் பெற்று இருப்பதோடு கேப்டனாகவும் தேர்வு செய்யபட்டு இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் அந்த மூன்று அணிகளிலும் பயிற்சியாளராக இடம் பெற்று இருக்கிறார்.
அதே போல அந்த மூன்று அணிகளிலும் சாஹல், பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, சுரேஷ் ரெய்னா, சுனில் நரைன், கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் ஆகிய வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். சூர்யகுமார் யாதவ் ஒரு அணியின் பிளேயிங் லெவனிலும், இரண்டு அணிகளின் இம்பாக்ட் வீரராகவும் இடம் பெற்று இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் மூன்று அணிகளிலும் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கையாளர்கள் தேர்வு செய்த 16 வீரர்கள் கொண்ட உத்தேச ஐபிஎல் அணி :
விராட் கோலி, டேவிட் வார்னர், கிறிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, ஏபி டிவில்லியர்ஸ், சூர்யகுமார் யாதவ், தோனி (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கீரான் பொல்லார்ட், சாஹல், ரஷித் கான், சுனில் நரைன். லசித் மலிங்கா, பும்ரா. பயிற்சியாளர் - ஸ்டீபன் பிளெம்மிங்
கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் தேர்வு செய்த 11 வீரர்கள் மற்றும் நான்கு இம்பாக்ட் வீரர்கள் கொண்ட ஐபிஎல் அணி :
பிளேயிங் 11 (பேட்டிங் வரிசையில்) - விராட் கோலி, கிறிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, ஏபி டிவில்லியர்ஸ், தோனி (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரஷித் கான், சாஹல், பும்ரா, லசித் மலிங்கா
இம்பாக்ட் வீரர்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சுனில் நரைன், டிவைன் பிராவோ
பயிற்சியாளர் - ஸ்டீபன் பிளெம்மிங்
ரசிகர்கள் தேர்வு செய்த 11 வீரர்கள் மற்றும் நான்கு இம்பாக்ட் வீரர்கள் கொண்ட ஐபிஎல் அணி :
பிளேயிங் 11 (பேட்டிங் வரிசையில்) - விராட் கோலி, கிறிஸ் கெயில், சுரேஷ் ரெய்னா, ஏபி டிவில்லியர்ஸ், ஷேன் வாட்சன், தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, சாஹல், அஸ்வின், புவனேஸ்வர் குமார், பும்ரா
இம்பாக்ட் வீரர்கள் - டேவிட் வார்னர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சுனில் நரைன்
பயிற்சியாளர் - ஸ்டீபன் பிளெம்மிங்


Click it and Unblock the Notifications