Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : எந்த கேப்டனாலும் தொட முடியாத தோனியின் பிரம்மாண்ட ஐபிஎல் ரெக்கார்டு.. அப்ப ரோஹித்?

சென்னை : ஐபிஎல் தொடரில் கேப்டனாக தோனி செய்துள்ள ஒரு சாதனையை இனி வேறு எந்த கேப்டனாலும் முறியடிக்கவே முடியாது என கூறப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளின் வெற்றியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிக டாஸ் வெல்லும் கேப்டன், அந்த அணிக்கு அதிக வெற்றிகளையும் பெற்றுக் கொடுப்பார் என கூறப்படுவதுண்டு.

அது உண்மை என நிரூபிக்கும் வகையில் ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுத் கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் தோனி, அதிக டாஸ் வென்ற கேப்டன்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். அவரது அந்த சாதனையை இனி எந்த கேப்டனாலும் முறியடிக்க வாய்ப்பு இல்லை எனும் அளவுக்கு அவருக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா குறைவாகவே டாஸ் வென்று இருக்கிறார்.

IPL 2024 IPL Captains with most toss wins MS Dhoni leads the chart

2008 முதல் 2023 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரைஸிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளின் கேப்டனாக செயல்பட்டு இருக்கும் தோனி 226 போட்டிகளில் 119 முறை டாஸ் வென்று இருக்கிறார். ரோஹித் சர்மா 158 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 81 முறை டாஸ் வென்று இருக்கிறார்.

இவர்கள் இருவருமே முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். மூன்றாவது இடத்தில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் உள்ளனர். விராட் கோலி 144 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 70 முறை டாஸ் வென்று இருக்கிறார். கவுதம் கம்பீர் 128 போட்டிகளில் 70 முறை டாஸ் வென்று இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட் 74 போட்டிகளில் 44 முறை டாஸ் வென்று இருக்கிறார்.

இந்த ஐந்து கேப்டன்களில் மிகவும் அதிர்ஷ்டக்கார கேப்டன் என்றால் அது கில்கிறிஸ்ட் தான். அவர் 59.46 சதவீத டாஸ் வெற்றியை வைத்துள்ளார். அடுத்து கம்பீர் 54.69 சதவீத டாஸ் வெற்றி வைத்துள்ளார். தோனி 52.65 சதவீத டாஸ் வெற்றியும், ரோஹித் சர்மா 51.27 சதவீத டாஸ் வெற்றியும் வைத்துள்ளனர். இந்த கேப்டன்சி பட்டியலிலும் விராட் கோலி மோசமான நிலையில் தான் இருக்கிறார். அவர் 48.61 சதவீத டாஸ்களை மட்டுமே வென்று இருக்கிறார்.

இந்த ஐந்து பேரில் இப்போது யாருமே ஐபிஎல் தொடரில் கேப்டன் இல்லை என்பதால் தோனியின் 119 டாஸ் வெற்றி சாதனையை இனி யாராலும் முறியடிக்க முடியாது. அடுத்த ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா கேப்டன் ஆனாலும் கூட அவர் மூன்று கேப்டனாக இருந்து 60 சதவீத டாஸ்களை வென்றால் மட்டுமே தோனியின் சாதனையை நெருங்க முடியும். அதற்கான வாய்ப்பு குறைவே.

Story first published: Monday, April 8, 2024, 19:28 [IST]
Other articles published on Apr 8, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+