Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : பக்கா பிளான்.. ரசிகர்களை மென்டல் ஆக்கி திரிய விட்ட ஐபிஎல் அணி.. கேப்டனை வைத்து உருட்டு

மும்பை : ஐபிஎல் அணிகளிலேயே பெரும் செல்வாக்கு கொண்ட அந்த அணி தாங்கள் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ரசிகர்களை அடக்க, தவறான செய்திகளை பரப்பி விட்டு பித்துப் பிடித்து அலைய வைத்துள்ளது.

சமீபத்தில் அந்த ஐபிஎல் அணி மிகப் பெரிய முடிவு ஒன்றை எடுத்தது. 10 ஆண்டுகள் தங்கள் அணியின் கேப்டனாக இருந்த மூத்த வீரரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. அடுத்த இந்திய டி20 அணி கேப்டனாக பார்க்கப்படும் வீரர் ஒருவரை அணியின் கேப்டனாக அறிவித்தது அந்த ஐபிஎல் அணி.

IPL 2024 : IPL team treats their fans in an unthinkable manner

இந்த மாற்றத்தை நிறுத்தி நிதானமாக அணியில் இருக்கும் முக்கிய வீரர்களிடம் ஆலோசித்து செய்து இருந்தால் பெரிய பிரச்சனை ஆகி இருக்காது. ஆனால், இந்தியாவிலேயே செல்வாக்கான அந்த அணியின் உரிமையாளர்கள் தாங்கள் எடுப்பது தான் முடிவு என அதிரடியாக இந்த கேப்டன்சி மாற்றத்தை செய்தார்கள்.

அதன் விளைவாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அந்த மூத்த வீரரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் அந்த அணியை பின் தொடர்வதை நிறுத்தினர். 2 - 3 நாட்களில் எல்லாம் இன்ஸ்டாகிராமில் 1.35 கோடியாக இருந்த அந்த அணியின் ரசிகர்கள் எண்ணிக்கை, அதிரடியாக 1.23 கோடியாக குறைந்தது. அதாவது 12 லட்சம் தீவிர ரசிகர்களை அந்த அணி இழந்தது.

அத்துடன் இந்த எதிர்ப்பலை ஓயும் என அந்த அணி நினைத்தது. ஆனால், தினமும் அந்த மூத்த வீரரின் ரசிகர்கள் புதிதாக வந்த கேப்டனை திட்டி, அந்த ஐபிஎல் அணிக்கு எதிரான பிரசாரத்தை சமூக ஊடகங்களில் செய்து வந்தனர். இந்த நிலையில், அந்த புதிய கேப்டன் ஐபிஎல் தொடரில் ஆடவே முடியாது என ரசிகர்கள் நம்பினால், தங்கள் அணியின் மீதான எதிர்ப்பலை குறையும் என திட்டமிட்டு அவருக்கு காயம் என்ற ஒரு பொய் செய்தியை பரவ விட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த பொய் செய்தி என்னவென்றால், அந்த புதிய கேப்டன் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரின் போது அவர் போட்டியில் பங்கேற்க தயார் ஆகி விடுவார். ஆனால், அதை மாற்றி அவரால் ஐபிஎல் தொடரிலேயே விளையாட முடியாது என பொய் செய்தி பரப்பி விடப்பட்டு இருக்கிறது. அதனால், அந்த ஐபிஎல் அணி மீண்டும் மூத்த வீரரை கேப்டனாக நியமிக்கும் என மற்றொரு செய்தியும் பரவத் துவங்கி இருக்கிறது.

அந்த ஐபிஎல் அணி எதிர்பார்த்தது போலவே அந்த மூத்த வீரரின் ரசிகர்கள் இப்போது, எங்கள் மூத்த வீரர் தான் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படப் போகிறார் எனக் கூறி வருகின்றனர். அவர்கள் இப்படியே அடுத்த ஐபிஎல் தொடர் வரை கத்திக் கொண்டு இருப்பார்கள். அதற்குள் அந்த புதிய கேப்டன் அடுத்த ஐபிஎல் தொடருக்கு தயாராகி வந்து விடுவார்.

அப்போது மூத்த வீரரை ஓரமாக உட்கார வைத்து விட்டு, அந்த புதிய கேப்டன் கையில் அணி ஒப்படைக்கப்படும். இப்படியாக ரசிகர்களுக்கு "பிலாக்கா பசங்க" என்ற அளவிற்கே மதிப்பு கொடுத்து, பொய் செய்தியை பரவவிட்டு அவர்களை பைத்தியம் பிடித்து அலைய வைத்துள்ளது அந்த அணி.

Story first published: Saturday, December 23, 2023, 20:48 [IST]
Other articles published on Dec 23, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+