Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2024 : மும்பை இந்தியன்ஸ் அணியில் மெகா விரிசல்.. பாண்டியாவுடன் கூட்டு சேர்ந்த இளம் வீரர்

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. அவர்கள் இருவரும் எப்படி ஒரே அணியில் விளையாடப் போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டன்சியில் ரோஹித் சர்மா விளையாடுவது கடினமான விஷயம் என முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேல் கூறி இருந்தார். அது தான் உண்மையும் கூட. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதில் இருந்தே புதிதாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா குறித்து அவர் எதுவும் பேசவில்லை.

IPL 2024 Ishan Kishan joins Hardik Pandya party in Mumbai Indians against Rohit Sharma

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மாவுக்கு எதிராக மேலும் ஒரு வீரர் ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்து இருக்கிறார். அவருடன் ரோஹித் சர்மா துவக்க வீரராக ஆட வேண்டிய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

அந்த வீரர் சமீபத்தில் இந்திய அணியில் இருந்து தாமாக விலகிய இஷான் கிஷன். இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா - பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேச்சுக்கு கட்டுப்படாமல் இஷான் கிஷன் தன்னிச்சையாக செயல்பட்டதால் அவரது பிசிசிஐ ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

IPL 2024 Ishan Kishan joins Hardik Pandya party in Mumbai Indians against Rohit Sharma

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை பறித்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் பேட்டிங் செய்வது உறுதி என கூறப்படும் நிலையில்,. இஷான் கிஷன் - ரோஹித் சர்மா எப்படி ஒன்றாக துவக்கம் அளித்து ஆடுவார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்ற பிற வீரர்களும் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததில் அதிருப்தியில் இருந்தாலும் அவர்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் 2024 ஐபிஎல் தொடரை அணுகுவார்கள் என்றே தெரிகிறது. அவர்களுக்கு பாண்டியாவால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் தனது முக்கியத்துவத்தை இழந்து இருக்கும் நிலையில், ஹர்திக் பாண்டியாவை, ரோஹித் சர்மா எப்படி அணுகப் போகிறார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Story first published: Monday, March 4, 2024, 11:29 [IST]
Other articles published on Mar 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+