பெங்களூரு: ஐபிஎல் மூலம் பல கிரிக்கெட் வீரர்கள் பணக்காரராக மாறி தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள். மேலும் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்று உழைத்து வருகிறார்கள்.
ஆனால் சில வீரர்கள் தங்களுக்கு திறமை இருந்தும் கோடிக்கணக்கில் திடீரென்று காசு வருவதால் அதை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் பல பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். இப்படி பல கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போன கர்நாடகாவை சேர்ந்த சுழற் பந்துவீச்சாளர் கரியப்பா தற்போது 20 லட்சத்திற்கு கூட செல்லாமல் விலை போகாத வீரர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார்.
