ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கடந்த 10 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற வில்லை. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக முன்னாள் கேப்டன் கௌதம் கம்பீர் திரும்பி இருக்கிறார்.
இது அந்த அணிக்கு ஒரு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கேகேஆர் அணியில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விளையாடுவாரா என்ற சந்தேகம் நிலவியது. கடந்து முறை அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்தார்.

இதனால் கே கே ஆர் அணியின் கேப்டனாக நிதிஷ் ரானா செயல்பட்டார். ஸ்ரேயாஸ், ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக இறுதிப்போட்டியில் 111 பந்துகளை எதிர் கொண்டு 95 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் மும்பை அணி 42வது முறையாக ரஞ்சிக்கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்த ஆட்டத்திற்கு பிறகு மீண்டும் ஸ்ரேயாஸ்க்கு முதுகில் வலி ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் அடைந்தது. இதனை அடுத்து மும்பையில் உள்ள மருத்துவர்களிடம் ஸ்ரேயாஸ், சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். அப்போது அவரை சோதித்த மருத்துவர்கள், ஸ்ரேயாஸ் ஐயரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட எந்த தடையும் இல்லை என்றும் அவர் வழக்கம் போல் ஐபிஎல் போட்டிகளில் ஆடலாம் என்றும் அறிவித்துள்ளனர்.
எனினும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்யாதீர்கள் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதாவது காலை ஸ்ட்ரெச் செய்து பந்தை தடுக்காதீர்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் முதுகில் அழுத்தம் ஏற்பட்டு காயம் ஏற்படலாம் என்றும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
பந்தை தடுக்கவே ஐபிஎல் போட்டியில் நேரம் இருக்காது என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடப் போகிறார். இது கே கே ஆர் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கே கே ஆர் அணி தங்களுடைய முதல் ஆட்டத்தை வரும் 23ஆம் தேதி தங்களது சொந்த மைதானத்தில் ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது.